இதல்லவோ OFFER.. பீஸ்ட் FDFS டிக்கெட் வாங்குனா.. பெட்ரோல் இலவசம்!.. எந்த தியேட்டர்ல?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பீஸ்ட் படத்தின் FDFS டிக்கெட் வாங்குபவர்களுக்கு பெட்ரோல் இலவசமாக அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertising
>
Advertising

காத்துவாக்குல ரெண்டு காதல்.. வெளிநாட்டு தியேட்டர் & OTT உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்!

விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வெளி வரும் திரைப்படம் பீஸ்ட்.

பூஜா ஹெக்டே, செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு, அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார், எடிட்டர் நிர்மல்குமார் எடிட்டிங்கை கையாள்கிறார்.

இசையமைப்பாளர் அனிருத் இசையில் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியான சிவகார்த்திகேயன் எழுதிய அரபிக் குத்து YouTube-லும் Instagram Reels-லும் பல சாதனைகளை படைத்து வருகிறது, மற்றும் சில தினங்களுக்கு முன் (19.03.2022) அன்று வெளிவந்த, கு.கார்த்திக் வரிகளில் தளபதி விஜய் பாடிய ஜாலியோ ஜிம்கானா பாடல் ரிலீஸாகி மக்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. 3 சிங்கிள் பாடல்களும், புரோமோக்களும் படத்திற்கு மிகப்பெரிய ஹைப் ஏற்படுத்தி உள்ளதால் படக்குழு மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறது.

தமிழ் புத்தாண்டு  தினத்தை முன்னிட்டு நாளை ஏப்ரல் மாதம் 13ம் தேதி படம் ரிலீஸாகும் என படக்குழு அறிவித்தது. பீஸ்ட் படம் சென்சார் செய்யப்பட்டு U/A சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.மேலும் படத்தின் நீளம் 155 நிமிடங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பீஸ்ட் படத்தின் தமிழக தியேட்டர் ரிலீஸ் உரிமத்தை  ரெட் ஜெயண்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளனர்.

இந்நிலையில் பீஸ்ட் படத்தின் டிக்கெட் முன்பதிவும் உலகம் முழுவதும் துவங்கி உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அமைச்சர் கே‌. கே. எஸ். எஸ். ஆருக்கு சொந்தமான ராஜலட்சுமி தியேட்டர் மற்றும் அமிர்தராஜ் தியேட்டரில் பீஸ்ட் படத்தின் FDFS காட்சியான காலை 7 மணி காட்சிக்கு (விருதுநகரில் காலை காட்சி 7 மணிக்கு தான் தொடங்குகிறது) 5 டிக்கெட் வாங்கினால் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு டிக்கெட்டின் விலை 500 ரூபாய்க்கு விஜய் மக்கள் இயக்கம் & விருதுநகர் விஜய் ரசிகர் மன்றம் சார்பில் விற்கப்படுகிறது. மேலும் அடுத்தடுத்த காட்சிகளுக்கு 300 முதல் 400 வரை டிக்கெட் கட்டணம் விற்கப்படுகிறது.

போடு வெடிய..15 வருடத்தில் 5 ஆவது முறை.. நடிகர் அஜித் உடன் இணைந்த MOST WANTED சினிமா பிரபலம்!

தொடர்புடைய இணைப்புகள்

Petrol is free with the purchase of Vijay Beast FDFS tickets

People looking for online information on Anirudh, Beast, Beast FDFS Ticket, Nelson Dilipkumar, Pooja Hegde, Vijay will find this news story useful.