வனிதா விஜயகுமார் திருமண விவகாரத்தில் பீட்டர் பால் தனது பளீச் பதில்களை கொடுத்துள்ளார்.
மூத்த நடிகர் விஜயகுமாரின் மகளாவார் வனிதா விஜயகுமார். இவர் நடிகர் விஜய் ஜோடியாக சந்திரலேகா திரைப்படத்தில் அறிமுகமானார். இதையடுத்து சில படங்களில் நடித்து வந்தவர், பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு ரீ என்ட்ரி கொடுத்தார். மேலும் சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்கள், யூடியூப் சேனல்கள் என பிசியாக வலம் வந்த வனிதா விஜயகுமார், பீட்டர் பால் என்பவரை அண்மையில் மறுமனம் செய்து கொண்டார். இதை தொடர்ந்து பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் இதுகுறித்து புகாரளிக்க, இவ்விவகாரம் சர்ச்சைக்குள்ளானது.
இந்நிலையில் பீட்டர் பால் முதல் முறையாக வனிதா விஜயகுமாரிடன் தனது பளீச் பதில்களை கொடுத்தார். அப்போது அவரிடம் , 7 வருடங்களாக எலசபெத்துடன் பிரிந்து இருக்கும் நீங்கள், ஏன் விவாகரத்து செய்யவில்லை என கேட்டதற்கு, '' எலிசபெத்தை பிரிந்து வந்த பிறகு, இன்னொரு வாழ்க்கை துணையை நான் தேடவில்லை. எனக்கு சரியான ஒரு துணையை நான் பார்ப்பேன் என கூட நினைக்கவில்லை. அதனால் தான் இந்த 7 வருட தனிமை வாழ்க்கையில் நான் விவாகரத்தை பற்றி யோசிக்கவில்லை'' என தெரிவித்துள்ளார்.