கமல்ஹாசன் நடிக்கும் "விக்ரம்" படத்தை, மாநகரம், கைதி, மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.

இந்த படத்தில் கமல்ஹாசனுடன் நடிகர்கள் விஜய் சேதுபதியும், மலையாள நடிகர் பகத் பாசிலும் இணைந்து நடிக்கின்றனர். கமல்ஹாசனின் மகனாக காளிதாஸ் ஜெயராம் நடிக்கிறார்.
விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஷிவானியும், மைனா நந்தினியும் நடிக்கின்றனர். கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர், முன்னோட்ட வீடியோ, மேக்கிங் வீடியோ சமீபத்தில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது.
இந்தப் படத்திற்கு 'ஜல்லிக்கட்டு' படத்திற்காக தேசிய விருது வென்ற ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் ISC ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் முன்னோட்டம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. விக்ரம் படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு 'விக்ரம்' படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக சென்னையில் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து காரைக்குடியில் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்தது. பின் இந்த படத்தின் இரண்டாவது அடுத்தக்கட்ட படப்பிடிப்பு கோவை ,பாண்டிச்சேரியில் நடந்தது. இறுதி கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. கடந்த டிசம்பரில் தொடங்கிய இறுதிக்கட்ட படப்பிடிப்பு (02.03.2022) அன்றுடன் நிறைவடைந்தது.
விக்ரம் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பான் இந்திய படமாக ஜூன்-3 அன்று வெளியாகிறது. இந்நிலையில் விக்ரம் படத்தின் இந்தி மொழி வட இந்திய உரிமையை பிரபல பென் ஸ்டூடியோசின், பென் மருதார் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இதனை படத்தயாரிப்பு நிறுவனம் RKFI வெளியிட்டுள்ளது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.
https://www.behindwoods.com/bgm8/