ராகுல் காந்தி பதவி நீக்கம் குறித்து ஒளிப்பதிவாளர் பி.சி. ஶ்ரீ ராம் ட்வீட் செய்துள்ளார்.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | LEO படத்துடன் ரிலீஸாகும் ரவி தேஜாவின் PAN INDIA படம்.. முழு விவரம்
கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது, கர்நாடகா மாநிலத்தில் உள்ள கோலார் தங்க வயலில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசும் போது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, "நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என்று எல்லா திருடர்களின் பெயர்களும் மோடி என முடிவது ஏன்?. அனைத்து திருடர்களும் மோடி என்ற பெயரையே கொண்டுள்ளனர்." என்று பேசியிருந்தார்.
இந்த சர்ச்சைக்குரிய பேச்சுக்கு எதிராக குஜராத்தை சேர்ந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் புர்னேஷ் மோடி என்பவர் ராகுல் காந்தி மீது குஜராத் மாநிலத்தின் சூரத் நீதிமன்றத்தில் 2019ஆம் ஆண்டு அவதூறு வழக்குத் தொடர்ந்தார்.
Images are subject to © copyright to their respective owners.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.15,000 அபராதமும் விதித்தது. மேலும் ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் மக்களவை செயலகத்தால் பறிக்கப்பட்டது. இதனால் ராகுல் காந்தி வெற்றிபெற்ற வயநாடு பாராளுமன்ற தொகுதி காலியாக இருப்பதாக விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Images are subject to © copyright to their respective owners.
இந்நிலையில் இது குறித்து தமது டிவிட்டர் பக்கத்தில் பல ட்வீட்களை ஒளிப்பதிவாளர் பி.சி. ஶ்ரீ ராம் பகிர்ந்து வருகிறார். மேலும் தன்னுடைய சொந்த கருத்துகளையும் ட்வீட் செய்துள்ளார். அதில், "தினம் தினம் அட்டூழியங்கள் நடக்கும் போது அனைவரும் அமைதியாக இருந்தால் நாம் அனைவரும் சமமான குற்றவாளிகள் தான்." என ட்வீட் செய்துள்ளார். ஒளிப்பதிவாளர் ஶ்ரீ ராம், இந்திய அளவில் புகழ்பெற்ற முன்னணி ஒளிப்பதிவாளர் ஆவார்.
Also Read | பிரசித்தி பெற்ற கோயிலில் விளக்கேற்றி சாமி தரிசனம் செய்த யோகி பாபு.. வைரல் போட்டோஸ்!