அஜித் பட தயாரிப்பாளருடன் இணைந்த பவன் கல்யாண்.. வெளியான புதிய படத்தின் கொலமாஸ் தமிழ் டீஸர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அஜித் பட தயாரிப்பாளரின் தயாரிப்பில் பவன் கல்யாண் நடிக்கும் புதிய படத்தின் தமிழ் முன்னோட்டம் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | நடிகை ஆனார் ‘அரபிக் குத்து’ ஜோனிடா காந்தி!.. விக்னேஷ் சிவன் வெளியிட்ட first look.! டைட்டில் இதுதான்.!

தமிழின் முன்னணி தயாரிப்பாளராக விளங்கிய ஏ.எம்.ரத்னம் இந்தியன், நட்புக்காக, குஷி, கில்லி, சிவகாசி,சுக்ரன்,பீமா போன்ற படங்களை தயாரித்தவர். பின்னர் அவர் சினிமாவில் சில காலம் ஈடுபடாமல் இருந்தார்.

2012ஆம் ஆண்டு மீண்டும் நடிகர் அஜித்தின் அழைப்பின் பெயரில் சினிமா தயாரிப்புக்கு மீண்டும் வந்தார். ஆரம்பம் (2013), என்னை அறிந்தால் (2015), வேதாளம் (2015) என தொடர்ச்சியாக மூன்று படங்களுக்கு அஜித் இவருக்கு கால்ஷீட் கொடுத்தார். மூன்று படங்களும் பெரிய வெற்றி பெற்றவுடன் மீண்டும் படத் தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.

விஜய் சேதுபதியை வைத்து கடைசியாக "கருப்பன்"(2017) படத்தை தமிழில் தயாரித்து இருந்தார். அதனைத் தொடர்ந்து பவன் கல்யானை வைத்து மிகப்பெரிய பட்ஜெட்டில் வரலாற்று திரைப்படத்தை தற்போது தயாரித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த படத்திற்கு 'ஹரிஹர வீர மல்லு' என பெயரிடப்பட்டுள்ளது. இயக்குனர் கிரிஷ் இயக்கத்தில் ஒளிப்பதிவாளர் ஞானசேகர் ஒளிப்பதிவில் இசையமைப்பாளர் MM கீரவாணி இசையில் இந்தப் படம் உருவாகிறது.

இந்த படத்தில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நித்தி அகர்வால் மற்றும் ஜாக்குலின் பெர்னான்டஸ் நடிக்கின்றனர். முக்கிய கதாபாத்திரத்தில் அர்ஜுன் ராம்பால் நடிக்கிறார்.  இந்த திரைப்படம் பவன் கல்யாணின் இருபத்தி ஏழாவது திரைப்படமாக உருவாகிறது

ஏற்கனவே இந்த படத்தின் கதாபாத்திர போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. இந்நிலையில் இன்று (02.09.2022) பவன் கல்யானின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு படத்தின்  புதிய முன்னோட்டத்தை வெளியிட்டுள்ளது.

"அர நொடிதான் டா உன முடிப்பான் டா கடமொடதடவென எலும்புடைப்பான் டா தொட தட்டித் தாக்கும் வீரன் டா" என்ற பின்னணி பாடலுடன் ஆக்சன் காட்சிகளோடு முன்னோட்டம் அமைந்துள்ளது.

இந்த படத்தின் தமிழ் வசனம் மற்றும் பாடல்களை மதன் கார்க்கி எழுதி உள்ளார்.

Also Read | Breaking: பெரும் சோகம்.! ‘சிம்டாங்காரன்’ பாடகர் பம்பா பாக்யா மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்.

அஜித் பட தயாரிப்பாளருடன் இணைந்த பவன் கல்யாண்.. வெளியான புதிய படத்தின் கொலமாஸ் தமிழ் டீஸர்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Pawan Kalyan Harihara Veera Mallu Movie Tamil Glance

People looking for online information on Harihara Veera Mallu Movie, Harihara Veera Mallu Movie Tamil Glance, Pawan Kalyan will find this news story useful.