1.5 கோடிக்கு ஒரே நேரத்தில் 8 சொகுசு கார்கள் வாங்கிய பவன் கல்யாண்.. இது தான் காரணமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜனசேனா கட்சியின் தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் 8 புதிய கார்களை வாங்கியுள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | கேரளாவில் மறு வீட்டுக்கு வந்த நயன்தாரா - விக்னேஷ் சிவன்..‌ இணையத்தில் Trend ஆகும் Cute Video!

பிரபல தெலுங்கு நடிகர் பவர் ஸ்டார் பவன் கல்யாண் சினிமா மட்டுமல்லாமல் அரசியலிலும் ஈடுபாடு கொண்டவர்.

பவன் கல்யாண் கட்சியான ஜனசேனா  வரும் தசராவின் போது பவனுக்கு அரசியல் சுற்றுப்பயணங்களை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த சுற்றுப்பயணம் மூன்று மாதங்களுக்கு தொடரும் என கூறப்படுகிறது. இதற்காக, 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய கார்களை நடிகர் பவன் கல்யாண் வாங்கியுள்ளார்.  தனது கான்வாய்க்காக இந்த மஹிந்திரா ரக கார்களை வாங்கியுள்ளார்.

ஒவ்வொரு காரின் மதிப்பு ரூ.19 லட்சம் என்றும் கூறப்படுகிறது. இந்த செய்தியை பவன் கல்யாண் கட்சியான ஜனசேனா ட்விட்டரில் பகிர்ந்துள்ளது. அந்த ட்வீட்டில், “விஜய தசமியில் இருந்து தொடங்கும் யாத்திரைக்கு ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாணின் புதிய வாகனங்கள் வந்துள்ளன. தலைவரின் கான்வாய்க்கு 8 புதிய வாகனங்கள் இன்று காலை மங்களகிரியில் உள்ள கட்சியின் மாநில அலுவலகத்திற்கு வந்தன" என கூறப்பட்டுள்ளது.

அக்டோபர் 5-ம் தேதி திருப்பதியில் இந்த அரசியல் சுற்றுப் பயணம் தொடங்கும் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சுற்றுப்பயணத்துக்கு முன், சாய் தரம் தேஜுடன் இணைந்து வினோதயா சித்தம் படத்தின் அதிகாரப்பூர்வ தெலுங்கு ரீமேக்கான படப்பிடிப்பை பவன் கல்யாண் முடித்துக் கொள்வார். மேலும் ஏ.எம். ரத்னம் தயாரிக்கும் ஹரி ஹர வீரமல்லு படத்துக்கு இந்த சுற்றுப்பயணத்துக்கு இடையில் இருக்கும் தேதிகளை பவன் கல்யாண் ஒதுக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

Also Read | மனைவி ரஞ்சனி எடுத்த CANDID போட்டோ.. பாராட்டி தள்ளிய நடிகர் கார்த்தி! முழு தகவல்

தொடர்புடைய இணைப்புகள்

Pawan Kalyan Bought a 8 Mahendra cars for 1.5 crores

People looking for online information on Mahendra cars, Pawan Kalyan, Pawan Kalyan Bought a 8 Mahendra cars will find this news story useful.