அமீர் - பாவனி சந்தித்து இதோட ஒரு‌ வருஷம் .. பார்ட்டிக்கு பின் இருவரும் உருக்கமான பதிவு.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவி சின்னத்திரையில் நாயகியாக வலம் வந்தவர் பாவனி.

Advertising
>
Advertising

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு ரசிகர்கள் மத்தியில் இன்னும் பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரி போட்டியாளராக விஜய் டிவியில் கோரியோகிராபராக இருந்த அமீர் உள்ளே வந்தார். ஆரம்பத்தில்  இருவரும் நல்ல நண்பர்களாக பழகி வந்தனர். பின்னர் அமீர், பாவனியிடம்  தனது காதலை கூறியிருந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களை மையமாக வைத்து BB Jodigal நிகழ்ச்சி நடந்து வந்து கொண்டிருந்தது. அதன்படி BB Jodigal நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் டான்சராக பங்குபெற்ற அமீர் மற்றும் பாவனி இருவரும் டான்ஸ் பார்ட்னராக இணைந்து ஆடி வந்தனர். இந்த BB Jodigal  நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில்  கோப்பையை கைப்பற்றினர். இருவரும் காதலிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

தற்போது அஜித்குமார் நடிக்கும் துணிவு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பாவனி & அமீர் நடித்துள்ளனர். இச்சூழலில் பாவனி கடந்த நவம்பர் மாதம் 9 ஆம் தேதி தனது 34 வது பிறந்தநாளை கொண்டாடினார். இதற்கு முன் நவம்பர் 6 ஆம் தேதி பிறந்தநாள் பார்ட்டியில், பாவனிக்கு நண்பர்கள் சர்ப்ரைஸ் கொடுத்த வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு பின் அமீர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், "எல்லாருக்கும் தேவையானது காதல்" என்று உருக்கமான பதிவை பதிவிட்டுள்ளார். மேலும் பாவனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "உன்னை அறிந்து ஒரு வருடம் ஆகிறது.
என் வாழ்க்கையை இன்னும் அழகாக்கியதற்கு மிகவும் நன்றி" என அமீரை டேக் செய்து கூறியுள்ளார்.

அமீர் - பாவனி சந்தித்து இதோட ஒரு‌ வருஷம் .. பார்ட்டிக்கு பின் இருவரும் உருக்கமான பதிவு.! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Pavni Reddy birthday party video went viral on social media

People looking for online information on Amir, Biggboss, Pavni, Thunivu will find this news story useful.