PAVNI PROPOSES AMIR: "உங்கள சைட் அடிச்சிருக்கேன்" - நேரில் LOVE சொன்ன பாவனி EXCLUSIVE

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் கலந்து கொண்டவர்கள் அமீர் மற்றும் பாவனி.

Advertising
>
Advertising

Also Read | Ponniyin Selvan PS1 படத்துல ஐஸ்வர்யா ராய்க்கு டப்பிங் கொடுத்த பிரபல நடிகை.‌. இவங்களா? செம தகவல்

விஜய் டிவி சின்னத்திரையில் நாயகியாக வலம் வந்த பாவனி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு தன்னுடைய வாழ்க்கை குறித்து பகிர்ந்து கொண்டார். அதன்படி, கணவரை இழந்த பாவனி தன்னுடைய வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை வாழ்ந்து கொண்டிருப்பதாக பகிர்ந்து இருந்தார்.  இதனிடையே பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரி போட்டியாளராக விஜய் டிவி கோரியோகிராபராக இருந்த அமீர் உள்ளே வந்தார்.

தொடக்கத்தில் பாவனிடம் விளையாட்டாக தனனுடைய காதலை சொல்ல தொடங்கினார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களை மையமாக வைத்து நடந்து வந்த  BB Jodigal நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் அமீர் மற்றும் பாவனி இருவரும் டான்ஸ் பார்ட்னராக இணைந்து ஆடி வந்தனர். இந்த நிகழ்ச்சியில்தான் இருவரும் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றி இருக்கின்றனர்.  அப்போது இது குறித்து பகிர்ந்தது மட்டுமின்றி, அமீருடன் வாழ்க்கையை தொடங்குவது குறித்தும் பாவனி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.

அதில், “நீங்கள் மிகச் சிறந்த மனிதர். மாஸ்டர். டான்ஸ் ஆடும் போது மிகவும் உறுதுணையானவர். நல்ல நண்பர் . எனவே நம்முடைய வாழ்க்கை பயணத்தை சேர்ந்து தொடங்கலாம். என்னுடைய வாழ்க்கையில் மிகச் சிறந்த இணையராக இருங்கள். அந்த நாளுக்காக நான் காத்திருக்கிறேன். நீங்கள் எனக்காக எப்போதும் இருப்பீர்களா.? எப்போதும் ஐ லவ் யூ” என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பிஹைண்ட்வுட்ஸ் நிகழ்ச்சியில் அமீர் மற்றும் பாவனி பங்குபெற்ற ரசிகர்கள் சந்திப்பில் அமீரிடம் நேரில் ப்ரொபோஸ் பண்ணிய பாவனி, “அமீர் எனக்கு உன் கேரக்டர் பிடித்திருக்கிறது. உன் சிரிப்பு பிடித்திருக்கிறது. நீ அவ்வப்போது சிரித்துக்கொண்டே சாய்ந்தபடி பார்க்கும்போது அழகாய் இருப்பாய். நீ பண்ணும் பல கியூட்டான விஷயங்களை ரசித்திருக்கிறேன். நீ சாலையில் கையைப் பிடித்து அழைத்துச் செல்லும் பொழுது பிடிக்கும். நீ எப்போதும் என் மீது காட்டும் அக்கறை பிடிக்கும். ஒரு மாஸ்டராக நீங்கள் உங்கள் வேலையை அர்ப்பணிப்புடன் பார்த்துக் கொண்டிருக்கும்போது நான் உங்களை சைட் அடித்திருக்கிறேன். சரி அவ்வளவுதான். ஐ லவ் யூ” என்று கூறினார்.  இதைக்கேட்ட அமீர், மிகவும் மகிழ்ச்சியானதுடன்,  “இப்படியெல்லாம் சொன்னதே இல்ல.. நன்றி” என்று கூறினார். இந்த முழுமையான நிகழ்ச்சியை வீடியோவில் காணலாம்.

Also Read | 'பிரம்மாஸ்திரா' படத்தின் ரிலீஸ்.. நிறைமாத கர்ப்பத்துடன் நடிகை ஆலியா பட் போட்டோஷூட்!

PAVNI PROPOSES AMIR: "உங்கள சைட் அடிச்சிருக்கேன்" - நேரில் LOVE சொன்ன பாவனி EXCLUSIVE வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Pavni Proposes Amir 1st TIME live Behindwoods Exclusive

People looking for online information on Ameer, Biggboss jodigal season 2, Pavni, Pavni Proposes Amir will find this news story useful.