"எனக்கு அமீரை புடிக்கும், ஆனா" தயங்கி சொன்ன பாவனி.. ஆட்டம் போட்ட அமீர்.. அப்படி என்ன சொன்னாங்க?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சிகளில் பெரிய அளவில் வெற்றி பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று, பிக்பாஸ்.

Advertising
>
Advertising

Also Read | “விஷ்ணு படத்துல சேர்ந்து பாடிய ஹிட் Song”… விஜய் அம்மா ஷோபாவின் இந்த வார குட்டி ஸ்டோரி!

தமிழை போலவே, ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது.

அதே போல, தமிழிலும் இதுவரை ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி இருந்தார்.

அமீர் - பாவனி ஜோடி

இதனையடுத்து, ஐந்து பிக்பாஸ் சீசன்களில் கலந்து கொண்டவர்களை வைத்து, பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியும் டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பாகி வந்தது. இதுவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இதனைத் தொடர்ந்து, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களை வைத்து, பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2 என்ற பெயரில், நடன நிகழ்ச்சி ஒன்று விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில், ஐந்தாவது சீசன் போட்டியாளர்களான அமீர் மற்றும் பாவனி ஆகியோர், ஜோடியாக சேர்ந்து ஆடி வருகின்றனர்.

இதனிடையே, சமீபத்தில் இன்ஸ்டாவில் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு நடிகை பாவனி பதில் தெரிவித்திருந்தார். இதில், பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி குறித்தும், அமீருடன் இணைந்து ஆடுவது குறித்தும் பாவனி தெரிவித்திருந்த பதில்கள், பெரிய அளவில் வைரலாகி இருந்தது.

"அமீரை புடிக்கும், ஆனா"

இந்நிலையில், பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் போது, அமீர் குறித்து பாவனி சொன்ன விஷயம், தற்போது ரசிகர்கள் மத்தியில் பகிரப்பட்டு வருகிறது. இதில், அங்கிருக்கும் கேள்விக்கு உண்மையை மட்டும் தான் சொல்ல வேண்டும் என ஒரு டாஸ்க் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படுகிறது. அப்போது, பாவனியிடம் அமீர் பற்றி கேள்வி கேட்கப்பட்டதாக தெரிகிறது.

இதற்கு பதிலளித்த பாவனி, "அமீரை எனக்கு பிடிக்கும். ஆனால், எனக்கு கொஞ்சம் டைம் வேண்டும்" என சிரித்துக் கொண்டே கூறுகிறார். இந்த பதிலை அவர் சொன்னதும் அங்கிருந்த அமீர், சந்தோஷத்தில் இருந்த படி நடனமாடவும் செய்கிறார். இது தொடர்பான வீடியோக்கள், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

Also Read | பிரபல நடிகையின் மர்ம மரணம்.. வீட்டை பரிசோதித்த போலீசாருக்கு கிடைத்த பரபரப்பு ஆதாரம்..!

தொடர்புடைய இணைப்புகள்

Pavni about ameer in biggboss jodigal season 2

People looking for online information on Ameer, Biggboss jodigal season 2, Pavni, Pavni about ameer will find this news story useful.