குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நிறைவு பகுதி தமிழ்ப் புத்தாண்டு அன்று நடந்தது.

விஜய் டிவி நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகி வந்த சீரியல்களைத் தொடர்ந்து விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்களுக்கென எப்போதும் மக்களிடையே தனி கவனமும் வரவேற்பும் இருந்து வந்தது. அதன் அடுத்த கட்டமாக பிக்பாஸ் எனும் புதுமையான நிகழ்ச்சி விஜய் டிவியில் அறிமுகப்படுத்தப்பட்டு 4 சீசன்களாக இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்தது. இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியதை அடுத்து, இந்த நிகழ்ச்சியின் அடுத்த சீசன் எப்போது என்று ரசிகர்கள் இப்போதே ஆர்வமாக ஏங்கத் தொடங்கிவிட்டனர்.
இதேபோல் குக் வித் கோமாளி நிகழ்ச்சியும் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனுக்கு நல்ல வரவேற்பு வந்ததை அடுத்து, இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் தொடங்கியது. பெரிய அளவில் எதிர்பார்ப்பு இல்லாமல் தொடங்கப்பட்ட 2வது சீசன் நாளடைவில் களைகட்டியது. இந்நிகழ்ச்சி மூலம் புகழ், பவித்ரா, சிவாங்கி, அஷ்வின், தர்ஷா உள்ளிட்டோர் இன்னும் புகழடைந்தனர். இந்நிலையில் தமிழ்ப்புத்தாண்டு அன்று ஒளிபரப்பான இந்நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலேவில் நடிகர் சிம்பு கலந்துகொண்டார்.
அதில், டைட்டில் கார்டு வின்னரான கனி, ரன்னர்களான ஷகிலா மற்றும் அஷ்வின் உள்ளிட்டோருடன், இதர குக்குகளுக்கும் கோமாளிகளுக்கும் கூட விருதுகள் வழங்கப்பட்டன. அப்போது புகழுக்கும் விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது.
அந்த விருதை சிம்பு புகழுக்கு வழங்கும்போது பவித்ரா தரலோக்கலாக விசில் அடித்துள்ளார். இதனை ரசிகர்கள் இப்போது பகிர்ந்து வருகின்றனர். அண்மையில் Behindwoods Gold Icons விழாவில் விருது பெற்ற பவித்ரா, தம் புகழில் பாதி புகழ், புகழையே சேரும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் பவித்ரா புகழின் வளர்ச்சியை ஊக்குவித்து அடித்த விசிலில் இவர்களின் ஒற்றுமை தெரிவதாகவும் இருவருக்குமான நெகிழவைக்கும் உறவு அவர்களது ரசிகர்களையும் நெகிழவைத்துள்ளதாகவும் பலரும் குறிப்பிட்டு வருகின்றனர்.
ALSO READ: Critical நிலையில் நடிகர் விவேக்.. மருத்துவமனை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!