குக் வித் கோமாளி சீசன் 2 வெகு சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. சமீபத்தில் நடந்த வைல்டு கார்டு சுற்றில் மதுரை முத்து, பவித்ரா, தர்ஷா குப்தா, தீபா, ஷகிலா மற்றும் ரித்திகா பங்கு பெற்றுள்ளனர். இந்நிலையில் இந்த கடினமான போட்டியில் வென்று யார் அந்த பிரமாண்ட பைனல்ஸ் சுற்றுக்கு செல்வார்கள் என்று ரசிகர்கள் மிகவும் ஆவலாக காத்திருந்தனர். இந்நிலையில் எப்பொழுதுமே இப்படிப்பட்ட வைல்டு கார்டு போட்டியில் ஒருவர்தான் தேர்வாகி இறுதி போட்டிக்கு செல்வார். ஆனால் இம்முறை யாருமே எதிர்பார்க்காத வண்ணம் இரண்டு பேர் போட்டியை வென்றனர். ஆம் ஷகிலா மற்றும் பவித்ரா இருவருமே சிறப்பாக சமைத்து நடுவர்களின் பாராட்டைப் பெற்றனர். எனவே இந்த சீசனில் ஐந்தாவது நபராக இறுதி போட்டிக்கு சென்றவர் பவித்ரா.

தற்போது பவித்ராவுக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் தெறி படத்தில் இருக்கும் சமந்தாவை போலவே மேக்கப் செய்த அவரின் புகைப்படம் ஒன்று மிகவும் வைரலானது. இதனை பார்த்த பலரும் அப்படியே சமந்தா போலவே இருக்கிறார் என்று கமெண்ட் செய்து வந்தனர். இந்நிலையில் இந்த புகைப்படத்தை நடிகை சமந்தாவே பாராட்டி "நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்" என்று பதிவிட்டுள்ளார். இந்நிலையில் இதற்கு பதில் அளித்துள்ள பவித்ரா "சமந்தா மேடம் நான் உங்களுக்கு எனது மனதின் ஆழத்திலிருந்து கோடிமுறை நன்றி செலுத்துகிறேன். ஆனால் இந்த பதிவை நான் பதிவிடவில்லை. மேக்கப் கலைஞர் ஒருவர் விரும்பியதால் தான் இப்படி ரீ -கிரியேஷன் செய்தோம். நாங்கள் அனைவருமே உங்களது மிகப்பெரிய ரசிகர்கள். ஒரு சதவீதம் கூட உங்கள் அளவுக்கு நான் வரமுடியாது. நீங்கள் எனக்கு அவ்வளவு பெரிய உந்துதல். இந்த பக்கம் என்னுடையது அல்ல. இது ஒரு ஃபேக் ஐடி" என்று கூறியுள்ளார்.