"என் புகழுக்கு காரணம் புகழ் தான்" நெகிழ்ந்து பேசிய பவித்ரா... டிரெண்ட் ஆகும் குக் வித் கோமாளி..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

குக் வித் கோமாளி நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இறுதிகட்டத்தை எட்டியுள்ள போட்டியில் இந்த வாரம் கனி, பாபா பாஸ்கர், ஷகிலா அஸ்வின் மற்றும் பவித்ரா பங்கெடுத்துள்ளனர். இந்நிலையில் இந்த வாரம் எலிமினேஷன் ரவுண்ட் என்பதால் ரசிகர்கள் மிகவும் ஆவலாக காத்திருந்தனர். அதுவும் பலரின் பேவரைட் அஸ்வின் மற்றும் பவித்ரா எலிமினேஷன் போட்டியில் பங்கெடுத்திருந்தனர். இதனையடுத்து யார் வெளியேறுவார் என்று ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் இன்றைய எபிசோடுக்காக காத்திருந்தனர்.

ஏனென்றால் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு தற்போது மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. ஒவ்வொரு வார இறுதியிலும் கவலைகளை மறந்து சிரிக்க இந்த நிகழ்ச்சி ஒரு பெரிய அருமருந்தாக இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். முக்கியமாக போன சீசனில் இருந்த புகழ், ஷிவாங்கி, மணிமேகலை, பாலாவுடன் இந்த சீசனில் சுனிதா, சரத் போன்றோர் பங்கெடுத்துள்ளனர். இந்த கோமாளிகளை வைத்துக்கொண்டு போட்டியாளர்கள் சமைக்கப் படாத பாடுப்படும் காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. இப்படி பல தடைகளை மீறி இந்த சீசனில் யார் ஜெயிப்பார் என்பதை அறிய ரசிகர்கள் மிகவும் ஆவலாக உள்ளனர்.

இந்நிலையில் இன்று நடந்த எலிமினேஷன் சுற்றில் பவித்ரா வெளியேறியுள்ளார். இது பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்நிலையில் அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும் போது பேசிய வார்த்தைகள் தற்பொழுது மிகவும் வைரலாகி வருகிறது. டிவிட்டரில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி டிரெண்ட் ஆகி வருகிறது. பவித்ரா கூறும்போது "எனது புகழுக்கு காரணம் புகழ்தான். ஆரம்பத்தில் புகழுடன் ஜோடி சேர்ந்த பொண்ணு  என்ற அடையாளத்தை கொடுத்து, இன்று பவித்ரா என்றால் ஓரளவுக்கு தெரிகிறது என்றால் அதற்கு காரணம் புகழ் தான். இதை நான் 200% நிச்சயமாகச் சொல்வேன். இது என்னுடைய குடும்பமாக மாறிவிட்டது" என்று கூறினார். கண்கலங்கிய புகழ் "இதற்கு காரணம் புகழ் தான் என்று பேசவே ஒருவருக்கு பெரிய மனது வேண்டும். அது உங்களிடம் இருக்கிறது பவித்ரா. இதற்காகவே நீங்கள் வாழ்க்கையில் மென்மேலும் வருவீர்கள்" என்று சொல்லி கண் கலங்குகிறார். குக் வித் கோமாளி ரசிகர்களுக்கு இது மிகவும் நெகிழ்ச்சியான தருணமாக அமைந்துவிட்டது.

தொடர்புடைய இணைப்புகள்

Pavithra final speech in cooku with comali நெகிழ்ந்து பேசிய பவித்ரா

People looking for online information on Pavithra, Pugazh will find this news story useful.