விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஃபினாலேவுக்கு இன்னும் ஓரிரு நாட்களே உள்ள நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 102வது நாள் எபிசோட் ஒளிபரப்பானது.
4 பேர் திடீரென வருகை
இதில் முன்னாள் போட்டியாளர்கள் 4 பேர் திடீரென சர்ப்ரைசாக வருகை தந்திருக்கின்றனர். முதலாவதாக சுருதி மற்றும் நாடியா சாங் இருவரும் பிக்பாஸ் வீட்டுக்குள் வருகை தந்தனர். அதன் பின்னர் சிபி மற்றும் அபினய் வருகை தந்தனர். இவர்களுள் நாடியா சாங் பிரபல மலேசிய மாடல். சுருதி பிரபல தமிழ் டஸ்கி மாடலாக புகழ்பெற்றவர்.
சிபி, அபினய்
நடிகர் சிபி, அண்மையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வழங்கப்பட 12 லட்ச ரூபாய் பணச்சலுகையுடன் வெளியேறினார். பிரபல பழம்பெரும் நடிகர்கள் ஜெமினி கணேசன் - சாவித்ரி தம்பதியரின் பேரனான அபினய் அதற்கு முந்தைய வாரங்களில் வெளியேறினார். இவர்கள் அனைவருமே இருவர் இருவருராக பிக்பாஸ் வீட்டுக்குள் வருகை தந்தனர்.
சுருதி - அமீர் - பாவனி
இதில் பிக்பாஸ் வீட்டில் முதல் ஆளாக எலிமினேட் செய்யப்பட்டவர் நாடியா. இவர் எலிமினேஷன்க்கு பின் இப்போதுதான் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் வருகை தந்திருக்கிறார். முன்னதாக சுருதி நிரூப்பை பார்த்து ஆளே மாறி விட்டதாகவும், இதற்கு முன்பாக வில்லன் போல இருந்த நிரூப் இப்போது ஹீரோ மாதிரி தோற்றம் அளிப்பதாகவும் கூறியிருந்தார். அதன் பிறகு அமீர் மற்றும் சுருதி இருவரும் பேசிக்கொள்ள தொடங்கிவிட்டனர்.
அப்போது அமீர், பாவனியுடனான ரிலேஷன்ஷிப் குறித்த பேச்சுகளால், தான் நினைத்து வந்தவற்றை செய்யவிடாமல் தடம் மாற்றியதாக குறிப்பிட, அதற்கு சுருதியும், ‘சில நேரங்களில் இந்த மாதிரி போட்டிகளில் அப்படித்தான் இருக்கும்’ என்று அவருக்கு பதில் கூறியிருந்தார்.
முன்னதாக பாவனியிடம் பேசிய அமீர், “அவ்வளவுதான் இனி என்னை கண்டு கொள்ள மாட்டாய்.. உன்னுடைய சிறந்த தோழி சுருதி வந்து விட்டாள்!” என்று கூறுகிறார். இதே போல் சுருதியிடமும் பேசிய அமீர், “பாவனி எப்போதும் உன்னை சிறந்த தோழி என்று சொல்லிக் கொண்டிருப்பாள்!” என்றும் கூறுகிறார்.
“இனி பாவனி என்ன கழட்டி விட்ருவா!”
இடையில் வந்த ராஜூவும் பாவனியிடம், “ஆமா நீ இனி எங்கள மாதிரி ஏழைங்க கிட்டலாம் பேசுவியா?” என சொல்லி கிண்டலடிக்க தொடங்கிவிட்டார். அப்போது அமீர் ராஜூ மற்றும் பாவனியிடம், “இனி என்ன கழட்டி விட்ருவா!” என்று பேசினார். ஆனால் பாவனி, “அதெல்லாம் இல்லை வாடா!” என்று அழைக்க, அங்குவந்த சுருதியோ, “அப்படிலாம் இல்லை, அனைவரிடமும் பேசுவதற்கு தான் நாங்கள் வந்திருக்கிறோம். பேசுவோம்” என்று சொல்லி ராஜூ, அமீர், பாவனி ஆகிய அனைவரையும் அழைத்துச் சென்றார்.