பிக்பாஸ் 5வது சீசன் களைகட்டி வருகிறது. இந்த சீசனில் பிரியங்கா வேறலெவலில் மாஸ் காட்டி வருகிறார். முன்னதாக ராஜூ, சின்ன பொண்ணுவின் கதைக்கு டிஸ்லைக் செய்து விட்டு, பின்னர் சின்ன பொண்ணுவிடம் சென்று அக்கா அக்கா என பேசிக் கொண்டிருந்தார்.
இதை தூரத்தில் இருந்து பார்த்து கலாய்த்த பிரியங்கா, சின்னப்பொண்ணுவை, ராஜூ ஃப்ரண்டு பிடிப்பதாக கிண்டல் அடித்துக் கொண்டிருந்ததுடன், அவர்கள் பேசிக் கொள்வதை டப்பிங் செய்துகொண்டும் இருந்தார்.
அப்போது பிரியங்காவை பெயர் சொல்லி அழைத்த பிக்பாஸ் “மைக்கை சரியாக மாட்டுங்கள்!” என்று சொன்னதும், அனைவரும் சிரிக்க, “சரி.. சரி பெருசு” என்று பிரியங்கா பிக்பாஸையே கலாய்த்தார்.
இந்நிலையில் மதுமிதாவிடம் பேசிக்கொண்டிருந்த பாவனி, தன் கணவர் இறந்து போய் 5 வருடங்கள் ஆகியும், அவரை நினைத்தே வாழ்வதாகவும், பெரிய ஹீரோயினாகும் வரை சர்வைவ் ஆக வேண்டும் அவ்வளவுதான், மற்றபடி வாழும் ஆசை இல்லை என்றும் அழுதபடி சொல்லிக் கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு வந்த பிரியங்கா, “எதுக்கு அழுதுகிட்டு இருக்க. நான் பாத்தேன்..” என்று பாவனியிடம் அதைப்பற்றி கேட்க, பாவனியோ பேச்சை மாற்றி, “ஆந்திரா சாப்பாடு சாப்படணும் போல இருக்கு!” என கூறுகிறார். அதற்கு, பிரியங்காவோ, “அவ்ளோதானே.. அங்க இமான் அண்ணாச்சி காரம் என எழுதி வெச்சிருக்காரு. அந்த உணவை மட்டும் நாக்கை உள்ளே விட்டு சாப்பிட்டால், உனக்கு ஆந்திரா சாப்பாடு சாப்பிடும் ஆசையே போய்விடும்” என்று கூறிவிட்டார்.
இப்படி பாவனிக்கு ஆறுதல் சொன்ன அதே கையோடு இமான் அண்ணாச்சியையும் போகிற போக்கில் கலாய்த்துவிட்டார் நம் பிரியங்கா!