நொறுங்கி போன பாவனி.. மதுமிதாவிடம் உருக்கமான பேச்சு!.. திடீர் எண்ட்ரி கொடுத்த பிரியங்கா!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான பாவனி ரெட்டி, சின்னத்தம்பி, ரெட்டைவால் குருவி உள்ளிட்ட சீரியல்கள் நடித்தவர். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டபோது, தன்னுடைய கணவர் தற்கொலை செய்து கொண்டு, இறந்து விட்டதாக உருக்கமாக பேசியிருந்தார். பல ரசிகர்களும் அவருடைய கதையை கேட்டு சோகத்தில் ஆழ்ந்தனர்.

pavani shares about her life to mathumitha priyanka entry

குறிப்பாக, கணவர் வேலைக்கு போய்விடுவார். வீட்டில் இருந்து குழந்தையை பார்த்துக் கொள்ளலாம் என்றும் தான் சுதந்திரமாக இருக்கலாம் என்றும் நினைத்த பாவனி ரெட்டி தன் வாழ்க்கையே தன் கணவரின் மரணத்தால் தலைகீழானதாகவும், வலியுடனும் இழப்புகளுடனும் இப்போது வரை பயணிப்பதாகவும் பாவனி தெரிவித்திருந்தார்.

அத்துடன் இன்னொரு திருமண வாழ்க்கைக்கு செல்லும் அளவுக்கு தனக்கு அதிர்ஷ்டம் இல்லை என்றும் கூறிய பாவனி ரெட்டி, தன்னுடைய கணவரின் குடும்பம் தனக்கு மிகவும் உறுதுணையாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து இசைவாணியிடம் இன்னொரு தருணத்தில் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்தபடி தனிமையில் பேசிய பாவனி, தன் கணவர் இறந்த பிறகு தான் அழவே இல்லை என்றும், என்ன நடந்தது என்று, நடந்ததை ரீகலைக்ட் செய்தபடி யோசித்துக்கொண்டு அப்படியே உட்கார்ந்து இருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மதுமிதாவிடம் தனிமையில் பேசிக்கொண்டிருந்த பாவனி, “தன் கணவர் இறந்து போய் 5 வருடங்கள் ஆனதாகவும், அவரை நினைத்துக்கொண்டு மட்டுமே வாழ்வதாகவும், அதற்கு ஆசையே இல்லை என்றும், பெரிய ஹீரோயினாகும் வரை சர்வைவ் ஆக வேண்டும் அவ்வளவுதான்” என்று சொல்கிறார். அப்போது அவரை மதுமிதா அருகில் இருந்தபடி சமாதானம் செய்கிறார்.

அப்போது அங்கு வரும் பிரியங்கா, “எதுக்கு அழுதுகிட்டு இருக்க. நான் பாத்தேன்..” என்று சொல்லி இதுகுறித்து கேட்க, பாவனி, “ஆந்திரா சாப்பாடு சாப்படணும் போல இருக்கு!” என டாப்பிக்கை மாற்ற, பிரியங்காவோ,  “இமான் அண்ணாச்சி காரம் என எழுதி வைத்திருக்கும் உணவை சாப்பிட்டால் அந்த ஆசையே போய்விடும்” என்று கலகலப்பூட்டுகிறார்.

Also Read: “அம்மா ஏத்துக்கல”.. “அடி அடினு அடிச்சு”.. “நாங்க மாறிட்டோம்.. நீங்க மாறுங்க!”.. தேம்பி அழும் BiggBoss நமீதா!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Pavani shares about her life to mathumitha priyanka entry

People looking for online information on Pavani emotional, Pavani Reddy will find this news story useful.