பிக்பாஸ் 5வது நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர் பாவனி.
பிரபல விஜய் டிவி சீரியல் நடிகையாகிய இவரது காதல் கணவர் 4,5 வருடம் முன்பு தற்கொலை செய்துகொண்ட நிலையில், அதே வலியுடன் தற்போது வாழ்ந்து வரும் பாவனி, பிக்பாஸ் வீட்டுக்குள் கதை சொல்லட்டுமா டாஸ்க் மூலம் தன் மீதான பழிகளுக்கு பதிலடி கொடுக்க முடிந்ததாகவும், அதனால் மனதின் பாரம் குறைந்ததாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பாவனியின் சகோதரி ஒரு விளக்கத்தை பதிவிட்டுள்ளார். அதில், “வணக்கம் நான் சிந்து. பாவனி ரெட்டியின் மூத்த சகோதரி. பாவனியை பற்றியும் அவள் உறவுகளை பற்றியும் சமூக ஊடகங்களில் பரவி வரும் சில போலி செய்திகளையும் தெளிவுபடுத்தி விளக்க விரும்புகிறேன். பாவனி அவளது கணவர் பிரதீப் குமாரின் எதிர்பாராத மறைவிற்கு பிறகு மறுமணம் செய்துக்கொள்ளவில்லை.
பாவனி அவள் கணவர் மீது மிகவும் பாசத்துடன் இருந்தாள். அவர்கள் மிகவும் மகிழ்ச்சியான தம்பதியினராக இருந்தார்கள். பிரதீப் மறைவிற்கு பிறகு அவரின் நினைவுகள் அவளைவிட்டு நீங்கவில்லை. அவருடன் அவள் வாழ்ந்த நாட்கள் அவளுக்கு என்றென்றும் பசுமையான நினைவுகளே. ஆனால் அவள் சமீப காலமாக வேறு ஒருவரை விரும்பினாள். நாங்கள் குடும்பமாக அவளின் விருப்பப்படியே அவளுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்து தர விரும்பினோம். ஆனால் சில பல காரணங்களால் பரஸ்பர புரிதலுடன் சுமூகமாக பிரிந்தனர்.
அவள் கடந்த 4 வருடங்களாக கணவரின் மறைவிற்கு பின் தனது வாழ்க்கையை மிக கண்ணியமாக தைரியமாக வாழ கற்றுக்கொண்டாள். தனது தொழிலில் முன்னுக்கு வந்து வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்பதில் மிக ஆர்வமாக உள்ளார்.
எனவே அனைத்து ஊடக பணியாளர்களும், ரசிகர்களும் மற்றும் அவளுடையை நலன் விரும்பிகளும் அவளின் உணர்வுகளையும் தனி நபர் உரிமைகளையும் மதித்து அவளின் இந்த பயணத்தில் உங்கள் ஆதரவை இன்று போல் என்றும் அளிக்குமாறு நாங்கள் வேண்டி கேட்டுக்கொள்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார். இதே பதிவு அவர் மூலமாக பவானி ரெட்டியின் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிடப்பட்டுள்ளது.