காலம் நம் தோழன் முஸ்தஃபா! ராஜூ, சிபியை நெகிழவைத்த பாவனியின் செயல்! #BIGGBOSS

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் அனைவரும் மூன்று அணிகளாக பிரிந்து கட்சிகளைத் தொடங்கினர்.

Advertising
>
Advertising

பின்னர் அனைவரும் கட்சிகளுக்கான பெயர்கள், கொள்கைகள் மற்றும் கொடிகளை அறிமுகப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து வாக்கு சேகரிப்பது, தங்கள் கொள்கைகளை பிரச்சாரம் செய்வது, தகுந்த வாசகங்களுடன் கோஷங்கள் போடுவது, பிக்பாஸ் வீட்டுக்குள் மாநாடு அமைத்து மேடை பேச்சுகளை பேசுவது, போட்டியாளர்களிடையே பொதுக்கூட்டம் போடுவது போன்ற ஆக்டிவிட்டிகளை பிக்பாஸ் போட்டியாளர் பிக்பாஸ் வீட்டுக்குள் செய்து கொண்டிருந்தனர். 

அதன்படி பிரியங்கா தலைமையில் உரக்கச் சொல் கட்சியும், சிபி தலைமையில் மக்கள் கட்சியும், சஞ்சீவ் தலைமையில் என்பிபி கட்சியும் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த கட்சிகளின் கொள்கைகள், பிரச்சாரங்கள், வியூகங்கள், திட்டங்கள், நோக்கங்கள் உள்ளிட்டவை பிரச்சாரங்களாகவே முன்னெடுக்கப்பட்டன.

எதார்த்த வாழ்க்கையில் நாம் பார்க்கும் கட்சிகளை போலவே இந்த பிக்பாஸ் வீட்டு அரசியல் கட்சிகளை சேர்ந்த போட்டியாளர்களும் அரசியல்வாதிகளை போல நடந்து கொண்டனர். அவர்களின் பேச்சு மொழியை உச்சரித்து அவர்களை இமிடேட் செய்து பேசினர். வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டியை கட்டிக்கொண்டு பிக்பாஸ் வீட்டுக்குள் வலம் வந்தனர்.

இந்த டாஸ்கின்போது புதிய பிரச்சனைகள் பெரிதாக எதுவும் வரவில்லை என்றாலும் கூட பழைய பிரச்சினைகள் போட்டியாளர்களிடையே தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. முன்னதாக இந்த டாஸ்க்கில், கொடி நாட்டும்போது பிரச்சனை வந்தது. குறிப்பாக கொடி நாட்டும் டாஸ்கில் இமான் மற்றும் தாமரை இருவரும் ஒரே பைப்பை பிடுங்கி தத்தம் கொடிகளை நாட்டுவதற்கு முயற்சித்த போது இருவருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து தாமரை மற்றும் பிரியங்காவுக்கும், இதே கொடி நாட்டும் டாஸ்க்கில் வார்த்தைப் போர் வலுத்தது. ஆனால் அப்போது பிரியங்கா, தாமரையிடம், ‘இமான் அண்ணாச்சியுடனான தள்ளுமுள்ளுவை குறிப்பிட்டு சண்டை போடவில்லையே ஏன் பேசவில்லை? அவருடன் சமாதானமாகப் போய் விட்டாய்? இப்ப மட்டும் வாய் கிழிய பேசுகிறாய்?’ என்று விமர்சித்தார்.

மேலும், “தெரியல தெரியல என சொல்றீங்க.. ஆனா நாடகம் நல்லா போடுறீங்க’ என்று சொல்லி பிரியங்கா, அமீர், அபினய், பாவனி அனைவரும் டான்ஸ் ஆடிக் கொண்டே புரட்சிகர பாடலை போல பாடிக்கொண்டே தாமரையை விமர்சித்தனர். ஆனால் தாமரை தன்னுடைய தொழிலை தொடர்புபடுத்துவதாக இந்த கருத்தை குறிப்பிட்டு வருத்தம் தெரிவித்திருந்தார்.

எனினும் பிரியங்கா, “அது அவளுடைய தொழிலை முன்னிறுத்தி சொல்லப்படவில்லை. பிக் பாஸ் வீட்டுக்குள் தாமரை நாடகம் போடுகிறார் என்றுதான் நான் கூறினேன்!” என்று விளக்கம் அளித்திருந்தார். இப்படி கட்சிகளிடையே சண்டைகள் போய்க் கொண்டிருக்கும் பொழுது பாவனி ராஜூவின் கருத்தை குறிப்பிட்டு பிரியங்காவிடம் வருத்தமாக பேசிக்கொண்டிருக்க, “அவர்களிடமே நேரடியாக சென்று கேட்டுவிடு?” என்று பிரியங்கா பாவனியை ஊக்குவித்தார்.

அப்போது பாவனி ராஜூவிடம் விருவிருவென சென்று, “நான் அபினய்யுடன் பேசுவது என்னவாக இருந்தால் உனக்கு என்ன?  இது பற்றி நீ எப்படி பேசலாம்? உனக்கு என்ன ரைட்ஸ் இருக்கிறது? உனக்கு யார் இதைப் பற்றி தொடர்ந்து பேச ரைட்ஸ் கொடுத்தது? இது என்னுடைய பர்சனல்!” என்று ஆவேசமாக கூறினார். சிபியும், “இது உன்னுடைய பர்சனல் அல்ல.. எங்கள் கண் முன்னே நடப்பவை பற்றி நாங்கள் பேசுவோம். பிக்பாஸ் சொல்லும்போது எங்கள் கருத்தைக் கூற தான் முடியும்!” என்று பேசினார். இதனால் பாவனி ஆவேசமாகவும் அழுகையுடனும் காணப்பட்டார்.

இறுதியில் பிக்பாஸ் வீட்டில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சுவையான உணவை அருந்திவிட்டு உணவு பற்றி பேசிக் கொண்டிருந்தபோது பாவனி ஒவ்வொருவராகச் சென்று கட்டிப்பிடித்து அவர்களுடனான உறவுச்சிக்கலை சரிப்படுத்திக் கொண்டார்.

குறிப்பாக ராஜூ, சிபி, அபினய், அமீர் என அனைவரையுமே கட்டிக்கொண்டு அனைவருடனும் சமாதானமாகவும், அமைதி வழியிலும் தொடரக்கூடிய போக்கை வெளிப்படுத்தினார். பார்ப்பவர்களுக்கு இந்த காட்சிகள் நெகழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன.

தொடர்புடைய இணைப்புகள்

Pavani hugs raju ciby even after a strong fight biggboss

People looking for online information on அபினய், சிபி, பாவனி, பிக்பாஸ், பிரியங்கா, ராஜூ, Bigg Boss 5 Tamil, Bigg Boss Tamil 5, Pavani abhinay, Pavani ciby, Pavani raju fight will find this news story useful.