BB JODIGAL 2: "பாவனி இப்போ லேடி அமீரா..?".. பிரம்மிக்க வைத்த புதிய ஃப்ரோமோ..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் BB Jodigal நிகழ்ச்சியின் 2வது சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | Breaking: "டைட்டிலே செமயா இருக்கே?".. சந்தானத்தின் அடுத்த படம் இதுவா? யாரு டைரக்டர்?

பிக்பாஸில் கலந்துகொண்டவர்களை மையமாக வைத்து இந்த நிகழ்ச்சியில், அவர்களின் உண்மையான இணையரையோ அல்லது வேறு டான்ஸ் பார்ட்னரையோ கொண்டு போட்டியாளர்கள் தங்கள் நடன திறமைகளை நிரூபித்து வருகின்றனர். இதில் முக்கிய போட்டியாளர்களாக அமீர் மற்றும் பாவனி இருவரும் நடனம் ஆடி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது அமீருடன் இணைந்து பாவனி புதிய நடனம்  ஆடியிருக்கிறார். பாகுபலி படத்தில் வரும் மன்னர் கால பாடலான, ‘பலே பலே பாகுபலி’ பாடலுக்கு அமீரும் பாவனியும் சேர்ந்து நடனம் ஆடினர். தேர்ந்த படைவீரர்கள் உடையில் வாளும் கேடையுமாக அமீர் , பாவனி மற்றும் குழுவினர் ஆடிய இந்த நடனத்தை பார்த்து அரங்கில் கூடியிருந்தவர்கள் ஆச்சரியமாகிவிட்டனர்.

குறிப்பாக கடந்த முறை அமீர் மற்றும் பாவனி இருவரும் நடனம் ஆடியது தொடர்பாக பதிவிட்டிருந்த பாவனி, “நான் இன்று இந்த அளவுக்கு ஆடுவேன் என கனவிலும் நினைக்கவில்லை. நீங்கள்தான் அமீர் என்னை வார்த்தெடுத்துள்ளீர்கள்” என்று குறிப்பிட்டிருந்தார். இதனிடையே அமீரும் தனது நடன பள்ளிக்கு போட்டியாக எதிரிலேயே ஒரு நடனப்பள்ளியை பாவனி ஆரம்பிக்கலாம் போல என்று  தமது வலைப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.



அந்த வகையில் அமீருக்கு ஜோடியாக ஆடும் பாவனி, அமீருக்கு இணையாக, அதாவது தனது மாஸ்டருக்கு இணையாகவே ஆடத் தொடங்கியதை அடுத்து, பிக்பாஸ் ஜோடிகள் அரங்கில் அவரை லேடி அமீர் என அழைக்கவே தொடங்கிவிட்டனர். அந்த அளவுக்கு டஃப் ஃபைட் கொடுக்கத் தொடங்கியுள்ளார் பாவனி. தொடர்ந்து பிக்பாஸ் ஜோடிகளின் வின்னர்கள் யார் என்கிற தகவல்கள் மிக விரைவில் அதிகாரப்பூர்வமாக தெரியவரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read | Cobra Trailer: அடடே.. விக்ரம் நடிக்கும் கோப்ரா.. டிரெய்லர்ல மதுரை முத்துவ கவனிச்சீங்களா..?

தொடர்புடைய இணைப்புகள்

Pavani becomes lady Amir BB Jodigal 2 new promo

People looking for online information on Amir, Amir pavani, Amir Pavani dance, Pavani, Vijay Television, Vijay tv will find this news story useful.