பிக்பாஸ் வீட்டில் மிரர் டாஸ்க் களைகட்டி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.
இதில் அண்மையில் தொடங்கப்பட்டுள்ள மிரர் டாஸ்க்கில், போட்டியாளர்கள் 2 அணிகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒரு அணியில் இருக்கும் நபர்கள், தங்களைப் போலவே இருக்க வேண்டும், மற்ற அணியைச் சேர்ந்த ஒவ்வொரு நபரும் எதிரணியில் இருக்கும் ஒவ்வொரு நபரின் கண்ணாடி பிம்பமாக செயல்பட வேண்டும் என்றும், அடுத்த நாள் அப்படியே மாற்றி நடந்துகொள்ள வேண்டும் என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
இதில், சிபி, நிரூப், இசை, ஐக்கி, பிரியங்கா, பாவனி ஆகியோர் ஏ அணி என்கிற ஒரு அணியில் உள்ளனர். இதேபோல் அக்ஷரா, அபினய், வருண், இமான், ராஜூ, தாமரை ஆகியோர் பி அணியில் உள்ளனர். இதில் கண்ணாடியாக இருக்கும் நபருக்கும், நிஜ நபருக்கும் ஒருவருக்கொருவர் கையைப் பிடித்துக்கொண்டபடி நடுவில் ஒரு உரையாடல் நடக்கும்.
அந்த உரையாடலில், மிரராக இருப்பவர் அந்த நிஜமான நபரிடம் சொல்ல நினைக்கும் கருத்துக்களை அவரது பார்வையில் இருந்து ஒரு கண்ணாடி சொல்வதுபோல் கூறவேண்டும். அப்படி பிரியங்காவின் கண்ணாடியான ராஜூ, பிரியங்காவிடம் தன் கருத்தை தனக்கே உரிய காமெடி மற்றும் கலக்கல் பாணியில் சொல்லிக் கொண்டிருந்தபோது, “பாவனியிடம் நீ தெரிஞ்சு தான் பழகுறியா இல்லையானு தெரியல...” என்று போகிற போக்கில் நகைச்சுவையாக கூறினார்.
ராஜூ பேசி முடித்துவிட்ட பின்பு, அவரிடம் இதுபற்றி கேட்ட பாவனி, “ஏன் அப்படி சொன்ன? என்ன பத்தி மட்டும் ஏன் அப்படி சொல்ற?.. இதெல்லாம் என் பற்றிய கருத்து பிம்பத்தை உருவாக்குவதாக உள்ளது” என குற்றம் சாட்ட, அவருக்கு பதில் அளித்த ராஜூ, “நீ வேற மாதிரி.. உன்னை வித்தியாசமா பாக்குறேன், எதனால் நான் அப்படி சொன்னேனு உங்கிட்ட சொல்றேன்.. ஃபுல்லாவே சொல்றேன்..
இதற்கு மொத்தமாக் காரணம் 3 நிகழ்வுகள் தான். உன்னை பற்றிய சந்தேகத்துடன் நான் உன்னிடம் போலியாக இருக்க முடியாது. எனினும் இப்போது நீ கேட்கிறாய் என்றால், முழுமையாக நான் காரணம் சொல்றேன். கேட்கிறாயா?” என கேட்டார். ஆனால் பாவனியோ, தான் அப்புறமாக கேட்பதாக சொல்ல, ராஜூவும், “சரி நீ அப்புறமா ஃப்ரீயா ஆயிட்டு கேளு” என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டார்.