“அவன் என்ன பத்தி தப்பா சொல்றானு சொன்னியா இல்லயா?” - அபினயை லாக் பண்ணி கேள்வி கேட்ட பாவனி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரே ஒரு Taskதான் பிக்பாஸ் கொடுத்தார்.
அதுவும் அந்த காயின் டாஸ்க். அவ்வளவுதான் எல்லாமே ஆரம்பித்துவிட்டது.

ஆம், அடுத்தடுத்து வெடிக்கும் சண்டைக் காட்சிகளை காண முடிகிறது. இதனிடையே பாவனி, அபினயை பார்த்து, “ரொம்ப தப்பு அபினய்.. இப்படி பண்ண கூடாது!” என்று கோபத்தில் கத்தியுள்ளார். முன்னதாக, “நீங்க கூட அக்‌ஷரா பற்றி என்கிட்ட தப்பா பேசுனீங்களே?” என்றார். 

அதன்படி அபினயிடம் பேசிய பாவனி, “நான் என்ன பேசினேன். நீங்க தான், வருண் என்னை பற்றி தப்பாக பேசிக் கொண்டிருந்தான் என்று நீங்கள்தான் என்னிடம் சொன்னீர்கள்.. இப்ப சொல்லவே இல்லைனு சொல்றீங்க..” என்று கேட்கும் பாவனி மேலும், “நான் நேரடியாக அவரிடமே கேட்டு விடுவேன்.. எனக்கு பின்னாடி பேசும் பழக்கமே கிடையாது!” என்று சொல்லிவிட்டு பக்கத்தில் இருக்கும் வருணைப் பார்த்து, “அபினய் உன்ன பத்தி என்கிட்ட சொன்னார்” என்று கத்துகிறார்.

இதனைத் தொடர்ந்து பாவனி மற்றும் அபினவ் பேசிக் கொள்ளும்போது,  “யாரைப் பற்றியும் தவறாக பேசிக்கொண்டிருக்க வேண்டியதில்லை. அவ்வளவு இருந்தால் நீங்கள் நேரடியாக வருணிடம் நான் சொன்னபோதே ஒத்துக்கொள்ள வேண்டியது னே?” என  கேட்கிறார். அப்போது அபினய், “நான் இதை தெளிவுபடுத்தவா?” என்று கேட்க, “இல்லை வேண்டாம்” என்று சொல்லிவிட்டு, பாவனி அங்கிருந்து நகர்ந்து விடுகிறார்.

மீண்டும் திரும்பிய பாவனி வருணிடம் இதை பற்றி, கூற, அருகில் இருந்த அபினய், “ஆமா.. பாதுகாப்பா இருக்க ”

முன்னதாக பாவனி மற்றும் அபினய் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்ததை பார்க்க முடிகிறது. ஒருமுறை அபினய் தன்னிடம் காட்டும் அக்கறை என்பது என்ன விதமான உணர்வு என்று சந்தேகம் வந்ததால் அவரிடமே பாவனி கேட்டுவிட்டார். அதற்கு அபினய் அது ஒன்றும் இல்லை என்று தெளிவுபடுத்த பாவனி அதன் பின்னர் சுயசமாதானம் செய்துகொண்டு அந்த விஷயத்தை பேசுவதை நிறுத்திக்கொண்டார்.

Pavani ask about abinay allegation infront of varun biggboss5

People looking for online information on Abinay, BiggBoss5, BiggBossTamil5, Pavani Reddy, Varun will find this news story useful.