“HINT கொடுத்தேன்.. மூஞ்சிக்கு நேரா சொல்லிருக்கணும்”.. பாவனி பேச்சு... ஷாக் ஆனதை சொன்ன அமீர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டில் அபினய் மற்றும் பாவனி இருவரிடையேயான உறவு குறித்து பிக்பாஸ் வீட்டினர் அவ்வப்போது பேசி வருவதை காணமுடிந்தது.

pavani accept her mistake to ameer in abhinay issue biggboss
Advertising
>
Advertising

இது குறித்து குறிப்பாக ராஜூ மற்றும் சி பி பேச செய்தனர். இதில் ராஜூ முன்னதாக ட்ருத் ஆர் டேர் நிகழ்ச்சியில் அபினய்யிடம், “பாவனியை லவ் பண்றியா?” என்று கேட்டது மிகப் பெரிய சர்ச்சைக்குள்ளானது. இதனைத் தொடர்ந்து சிபி ஒரு டாஸ்க்கில் இதுபற்றி பேசும்போது, பாவனி மற்றும் அபினய் இருவருக்கும் இடையே இருப்பது காதலும் இல்லை, பிரண்ட்ஷிப் இல்லை என்று கூறியதை அடுத்து இந்த சம்பவம் இன்னும் வெடித்தது.

pavani accept her mistake to ameer in abhinay issue biggboss

அப்போது பாவனி,  ராஜூ மற்றும் சிபி இருவரிடமும், “இதை பற்றி பேசுவதற்கு யாருக்கும் ரைட்ஸ் இல்லை, இது தன்னுடைய பெர்சனல்!” என்று ஆவேசமாக கூறி சண்டை போட்டார். ஆனால் வார இறுதியில் இதுபற்றி கமல்ஹாசன் விவாதித்த போது, “ஒருவரின் பெர்சனல் என்று இருக்கும் பொழுது அதை பற்றி யாரும் பேசக்கூடாது” என்று குறிப்பிட்டிருந்தார்.

அதே சமயம், “இப்படி ஒரு எண்ணம் பாவனிக்கே இருக்கும் நிலையில் மற்றவர்களுக்கு இந்த விமர்சனம் இருப்பது என்பதில் ஆச்சரியம் இல்லை!” என்றும் குறிப்பிட்டு இருந்தார். எனினும் , “இது பற்றி யாரும் இனிமேல் பேசக் கூடாது என்றும், இது அவர்கள் 2 பேரும் பேசிக்கொள்ள கூடிய விஷயம், ஆனால் அவர்கள் இதுபற்றிய தெளிவைத் தரும் வகையில் பேசாமல், மற்ற அனைவரையும் பேச வைத்துவிட்டார்கள்” என கமல் பேசினார்.

இதனிடையே அபினய்க்கும் தனக்குமான விவகாரம் குறித்து அண்மைக் காலமாக பிக்பாஸ் வீட்டில் பாவனி ஃபீல் பண்ணிக் கொண்டிருப்பதை அவ்வப்போது காண முடிந்தது. இதேபோல், சமீபமாகவே பாவனி தனியாக உட்கார்ந்து ஃபீல் பண்ணும்போதெல்லாம் அவரிடம் பேசி அவரை கோரியோ கிராஃபர் அமீர், சமாதானப்படுத்த முயற்சிப்பதையும் காண முடிகிறது.

இந்நிலையில், அமீரிடம் பேசிய பாவனி, “அபினய் விவகாரத்தில் அவர் என்னிடம் நெருங்குவதாக எனக்கு ஃபீல் ஆனபோது, அவரை விலகுவதற்கு அவருக்கு அவ்வப்போது நான் ஹிண்ட் கொடுத்து வந்தேன். ஆனால் அவ்வாறு ஹிண்ட் கொடுத்தது தவறு.

இதேபோல், நடந்ததெல்லாம் எனக்கே தேரியும், பிக்பாஸ் வீட்டு கேமராவுக்கு தெரியும். அவர் அவ்வாறு என்னுடன் பழகியதாக மற்றவர்கள் குற்றம் சாட்டினார்கள், ஆனால் எனக்கே அப்படி ஃபீல் ஆனது தான் உண்மை, எனினும் அவருக்கு இது தொடர்பாக ஹிண்ட் கொடுத்து வந்ததற்கு பதிலாக மூஞ்சிக்கு நேராக, இதுபற்றிய எண்ணம் குழப்பமாக தோன்றும்போதே சொல்லிருந்தால், இத்தனை பிரச்சனை இல்லை!” என பேசினார்.

முன்னதாக அபினய் பாவனியின் மீது காட்டும் கூடுதல் அக்கறையில் இப்படி ஒரு ஃபீலிங்கை பார்ப்பவர்கள் உணர முடிவதாக பாவனியிடம் கூறிய அமீர், ஆனால் அபினய் மீதும் தவறு இல்லை என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் பாவனி இவ்வாறு கூறுவதை பார்த்துவிட்டு அதிர்ந்த அமீர், “அப்போ, நீ தெரிஞ்சு கிட்டே தான் சொல்லாம இருந்திருக்கியா? அது தெரிஞ்சதும் நான் ஷாக் ஆயிட்டேன்!” என்று கலவரமாக கூறினார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Pavani accept her mistake to ameer in abhinay issue biggboss

People looking for online information on BiggBossTamil5, Pavani abhinay, Pavani ameer, Vijay tv will find this news story useful.