"எனக்கு பிடிக்காது".. "நான் நார்மலா இருக்கேன்!".. அபினய் & பாவனி விவகாரம்.. குறும்படம் போட்ட கமல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டுக்குள் மிக நீண்ட நாட்களாக போய்க்கொண்டிருந்த பிரச்சனையாக பாவனி மற்றும் அபினய் பிரச்சினை உருவெடுத்திருந்தது.

Advertising
>
Advertising

ஒவ்வொரு டாஸ்க் நடக்கும் பொழுதும் ஒவ்வொருவருக்கும் ஒரு பிரச்சனை என்றால் பாவனி மற்றும் அபினய் இருவருக்கும் இடையே, இவர்கள் இருவருக்கும் உண்டான உறவு குறித்த பிரச்சனை மற்ற ஹவுஸ்மேட்ஸ்களால் பேசப்பட்டுக் கொண்டே வந்து இருந்தது. இந்த நிலையில் அண்மைக்காலமாக அபினய் மற்றும் பாவனி இடையேயான உறவு குறித்து ராஜூபேசத் தொடங்கியது சர்ச்சையை கிளப்பியது. முன்னதாக பிக்பாஸ் தொடங்கிய முதல் வாரத்தில் அபினய்யிடம் நேரடியாக பேசிய பாவனி, “என் மீது அப்படி ஒரு பீலிங் இருக்கிறதா?” என்று கேட்க அதற்கு அப்போது அபினய் விளக்கம் கொடுத்திருந்தார். இதனை தொடர்ந்து ஓரிரு வாரங்களுக்கு முன்பு ராஜூ, ட்ருத் ஆர் டேர் விளையாட்டு விளையாடும் பொழுது அபினய்யிடம், “பாவனிய நீ லவ் பண்றியா?” என்று கேட்டிருந்தார்.

இதனை தொடர்ந்து சிபி தன்னுடைய கருத்தை கூறும் பொழுது, அபினய் & பாவனி இருவருக்கும் இடையே காதலும் இல்லை, பிரண்ட்ஷிப்ஃபும் இல்லை என்று கூறியிருந்தார். இதனை அடுத்து அரசியல் கட்சிகள் டாஸ்க் நடந்து கொண்டிருந்தது. அப்போது பாவனியின் மனதில் இருப்பது என்னவோ அதை நேருக்கு நேராக கேட்டுவிடச் சொல்லி பிரியங்கா கூறினார். இதனால் பாவனி, ராஜூ மற்றும் சிபி இருவரிடமும், “இது எங்கள் பர்சனல்.. இதைபற்றி பேசாதீர்கள்! உங்களுக்கு யார் ரைட்ஸ் கொடுத்தது?” என்று கேட்டதுடன், “நான் அபினய்யுடன் பேசுவதால் உனக்கு என்ன?” என்று நேரடியாகக் கேட்டார்.

இதுகுறித்து வார இறுதியில் கமல்ஹாசன் ராஜூவிடம் இதுபற்றி கேட்க, ராஜூ,  பாவனி தன்னிடமே நேரடியாக வந்து தனக்கும் அபினய் தன் மீது அப்படி ஒரு பீலிங்குடன் இருப்பதாக தோன்றுவதாக குறிப்பிட்டதை கமல்ஹாசனிடம் விளக்கினார். இதனைத் தொடர்ந்து, பாவனி  இதனை ஆமோதித்தும், அபினய் இதனை மறுத்தும் பேசினர். பின்னர் கமல்ஹாசன் ஒரு குறும்படம் போட்டார். அந்த குறும்படத்தில் பாவனியிடம் அமீர் இரண்டு முறை, அபினய் அந்த ஃபீலிங்குடன் நடந்து கொள்வது குறித்து பற்றி பேசுகிறார். அவரிடம் ஆமோதித்து பேசுவதுடன் தனக்கு அபினயை சுத்தமாக பிடிக்காது என்று பாவனி குறிப்பிடுகிறார். இதேபோல் அதை ராஜூவிடம் நேரடியாகவே சொல்லிவிட சொல்லி அவர் சொல்கிறார். மேலும் அது அபினய் தவறும் இல்லை என்றும் அமீர் கூறுகிறார்.

இதனை தொடர்ந்து ராஜூவிடம் நேரடியாகப் பேசும் பாவனி தனக்கும் அந்த ஃபீலிங் இருப்பதாக தோன்றுவதாகா ஒப்புக்கொண்டு பேசியதுடன், பிறகு, சொல்லவில்லை என்று சொல்லக் கூடாது என்று சொல்லி அனுப்புகிறார். இந்த குறும்படங்களை போட்டுக் காண்பித்த பிறகு பாவனி, தன் கருத்தில் உறுதியாக இருந்தார். அபினய் நார்மலாக இல்லை என்றும், அவர் தனக்கு அந்த ஃபீலிங் கொடுப்பதாகவும் குற்றம்சாட்டினார். ஆனால் அபினய், “நான் எப்போதும் போல நார்மலாக தான் இருக்கிறேன்” என்றார். இதனை தொடர்ந்து தாமரை, பிரியங்கா, அக்‌ஷரா என மற்றவர்கள் அனைவரும் யாரையும் கட்டாயப்படுத்தி அப்படி ஒரு ஃபீலிங் கொடுக்க முடியாது. “பிடிக்கவில்லை என்றால் நீங்கள் பேசுவதை நிறுத்திக் கொண்டிருக்கலாமே?” என்று அறிவுறுத்தினர்.

எனினும் இதனை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த கமல்ஹாசன், “சரி இப்போது இது பற்றியா தெளிவான ஒரு புரிதல் இருவருக்குமே வந்திருக்கும். நீங்கள் இருவரும்தான் இதைப் பற்றி வெளிப்படையாக பேசாமல் அத்தனைபேரையும் பேச வைத்துவிட்டீர்கள். வீட்டுக்குள் இருப்பவர்கள் வீட்டுக்கு வெளியில் இருப்பவர்கள் அனைவரும் குழம்பிப் போய் இருக்கிறார்கள். அதற்கு காரணம் நீங்கள் இருவரும் நேரடியாக இதுபற்றி பேசாதது தான்!” என்று குறிப்பிட்டார்.

மேலும் மற்றவர்கள் இனி  இதைப் பற்றி பேச வேண்டியதில்லை என்றும் கமல்ஹாசன் குறிப்பிட்டார். அதன்பிறகு பிரியங்கா உள்ளிட்டோரிடம் பாவனி பேசும்போது, “எனக்கு மட்டும் அப்படி தோன்றி இருந்தால் பரவாயில்லை, விசாரித்து பார்த்தால் அனைவருக்குமே தோன்றியிருக்கிறது அப்படி என்றால் அப்படித்தானே நடந்திருக்கிறார் என்று அர்த்தம்” என்று பேசினார். இதேபோல் பிக்பாஸ் வீட்டுக்குள் அபினய், தாமரை மற்றும் அக்‌ஷரா உள்ளிட்டோரிடம் பேசும்போது, “இன்றுகூட பாவனி என்னிடம் இது பற்றி கேட்டாள்.  நான் நீ சும்மா சும்மா இதே மாதிரி கேட்டுக் கொண்டே இருக்காதே? எனக்கு அப்படியான ஃபீலிங் இல்லை. நான் எப்போதும் போல தான் இருக்கிறேன்! என்று நேரடியாக கூறிவிட்டேன்” என்று கூறினார்.

தொடர்புடைய இணைப்புகள்

Pavani abhinav issue short film biggboss 5 tamil kamal hassan

People looking for online information on Abhinav, Abhinay, Biggboss, Biggboss 5 tamil, Biggboss tamil 5, Kamal Haasan, Kamal hassan, Pavani, Pavani abhinay, Raju jeyamohan, Vijay tv will find this news story useful.