சிம்பு - கௌதம் கார்த்திக் இணையும் 'பத்து தல'.. சூப்பர் லுக்கில் STR! தோரணையே வித்தியாசமா இருக்கே

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த ஆண்டு நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான 'மாநாடு' திரைப்படம், 100 கோடிக்கும் மேல்  வசூலித்து மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது.

Advertising
>
Advertising

Also Read | சிம்பு - கௌதம் கார்த்திக் இணையும் 'பத்து தல' - வெளியானது அடுத்த அப்டேட்!

இதனைத் தொடர்ந்து, கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், சிம்பு நடித்துள்ள "வெந்து தணிந்தது காடு" திரைப்படம், செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. முன்னதாக, இந்த படத்தின் டீசர் மற்றும் முதல் சிங்கிள் ரிலீஸ் ஆகி ரசிகர்களை  கவர்ந்தந்திருந்தது.

வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை தொடர்ந்து, நடிகர் சிம்பு அடுத்ததாக கிருஷ்ணா இயக்கத்தில் 'பத்து தல' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில், சிம்புவுடன் கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஸ்டுடியோ கிரீன், K. E. ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

பத்து தல படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்திருந்த நிலையில், இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்திலும், மூன்றாவது கட்டப்படிப்பு கன்னியாகுமரியில் நடந்திருந்தது. தொடர்ந்து, பத்து தல படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என்று படத்தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் ட்விட்டரில் சிலநாட்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்லாரி பகுதியில் சிம்பு தொடர்பான காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. இதனை சிம்பு தனது முகநூல் பக்கத்தில் படப்பிடிப்பில் எடுத்த BTS புகைப்படங்களை வெளியிட்டு அறிவித்துள்ளார்.

பத்து தல திரைப்படம் இந்த ஆண்டு, டிசம்பர் 14 ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read | சிம்பு - PBS நடிக்கும் 'பத்து தல'.. இந்த ஊர்ல தான் ஷூட்? BTS போட்டோவுடன் வெளிவந்த அப்டேட்!

தொடர்புடைய இணைப்புகள்

Pathu Thala Movie Silambarasan TR New BTS Image from Bellary Karnataka

People looking for online information on Pathu Thala, Pathu Thala Movie, Pathu thala Movie updates, Silambarasan TR will find this news story useful.