சிம்பு & கௌதம் கார்த்திக் நடிக்கும் 'பத்து தல'.. புகைப்படங்களுடன் வெளியான சூப்பர் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிம்பு & கௌதம் கார்த்திக் நடிக்கும் 'பத்து தல' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | துணிவு படத்தில் G.P. முத்து.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே! செம சர்ப்ரைஸ்

மாநாடு, வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை தொடர்ந்து, நடிகர் சிம்பு அடுத்ததாக கிருஷ்ணா இயக்கத்தில் 'பத்து தல' திரைப்படத்தில் நடித்துள்ளார்.

கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஆன 'மஃப்ட்டி' படத்தின் ரீமேக்காக 'பத்து தல' படம் உருவாகிறது.

நிழல் உலக தாதாவை தேடிப்போகும் ரகசிய போலிஸ் பற்றிய கதை தான் இந்த படம். இந்த திரைப்படத்தில், சிம்புவுடன் கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கலையரசன், இயக்குனர் கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

ஸ்டுடியோ கிரீன், K. E. ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தில் எடிட்டராக தேசிய விருது பெற்ற எடிட்டர் பிரவீன் K L பணிபுரிகிறார்.

பத்து தல படத்தின்   படப்பிடிப்பு ஆந்திராவில் உள்ள ஐத்ராபாத், விசாகப்பட்டினம், , கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்லாரி, துங்கபத்திரை அணை, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, கோவிலூர்,கன்னியாகுமரி ஆகிய ஊர்களில் நடந்து நிறைவடைந்தது.

தற்போது இந்த படத்தின் பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நடிகர் கௌதம் கார்த்திக் இந்த படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் டப்பிங் பணிகளை மேற்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

 

Also Read | இதோ வந்துருச்சு.. OTT-யில் ரிலீஸாகும் அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய "கோல்டு".. எப்போ? எதுல?

தொடர்புடைய இணைப்புகள்

Pathu Thala Movie Dubbing Finished by Gautham Karthik

People looking for online information on Gautham Karthik, Pathu Thala, Pathu Thala Movie Update, Silambarasan TR will find this news story useful.