"சிம்புவை தவறா பேசாதீங்க".. 'பத்து தல' இயக்குனர் கிருஷ்ணா பரபரப்பு ட்வீட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மாநாடு, வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை தொடர்ந்து, நடிகர் சிம்பு அடுத்ததாக கிருஷ்ணா இயக்கத்தில் 'பத்து தல' திரைப்படத்தில் நடித்துள்ளார்.

Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

Also Read | மகிழ் திருமேனி சார்பில் அஜித் மேலாளர் சுரேஷ் சந்திராவின் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை.!

கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஆன 'மஃப்ட்டி' படத்தின் ரீமேக்காக 'பத்து தல' படம் உருவாகிறது.

இந்த திரைப்படத்தில், சிம்புவுடன் கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கலையரசன், இயக்குனர் கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

ஸ்டுடியோ கிரீன், K. E. ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தில் எடிட்டராக தேசிய விருது பெற்ற எடிட்டர் பிரவீன் K L பணிபுரிகிறார்.

Images are subject to © copyright to their respective owners.

பத்து தல படத்தின்   படப்பிடிப்பு ஆந்திராவில் உள்ள ஐத்ராபாத், விசாகப்பட்டினம், , கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்லாரி, துங்கபத்திரை அணை, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, கோவிலூர்,கன்னியாகுமரி ஆகிய ஊர்களில் நடந்து நிறைவடைந்தது.

தற்போது இந்த படத்தின் பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மார்ச் மாதம் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்து தல படத்தின் முதல் சிங்கிளான "நம்ம சத்தம்" என்ற பாடல், கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதியன்று சிம்பு பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது.

Images are subject to © copyright to their respective owners.

இதனைத் தொடர்ந்து, பத்து தல படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களையும் ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில், தற்போது பத்து தல படம் குறித்து நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி, பத்து தல படத்தின் ப்ரோமோஷனல் பாடலின் ஷூட்டிங் AVM ஸ்டுடியோவில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.  இந்த ப்ரோமோ  வீடியோவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்,  பாடலாசிரியர் கபிலன், இயக்குனர் கிருஷ்ணா ஆகியோர் தோன்ற உள்ளனர். இது தொடர்பான புகைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இயக்குனர் கிருஷ்ணா தமது டிவிட்டர் பக்கத்தில் ப்ரோமோ வீடியோ குறித்து ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.  அதில், "அன்புள்ள அனைவருக்கும், இதை தெளிவுபடுத்த விரும்புகிறேன், பத்து தல ப்ரோமோ வீடியோவில் சிம்பு இடம் பெற வேண்டாம் என்பதே எங்கள் உத்தி. எங்கள் உத்தியின்படி ப்ரோமோ வீடியோவில், சிம்பு இடம் பெறவில்லை. எனவே எந்த காரணத்திற்காகவும் சிம்பு பெயரை பயன்படுத்தி வெறுப்பை உமிழாதீர்கள். பத்து தல படத்தின் விளம்பரம் பற்றி தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு தெளிவான யோசனை உள்ளது. நாங்கள் வெறுப்பு பேச்சுக்களை வெறுக்கிறோம்." என கிருஷ்ணா ட்வீட் செய்துள்ளார்.

Also Read | பா.ரஞ்சித் படத்தில் இணைந்த பிரபல ஹாலிவுட் நடிகர்.. தெறிக்கவிடும் போஸ்டர் லுக்..!

தொடர்புடைய இணைப்புகள்

Pathu Thala Director Obeli N Krishna Tweet about Promo Video Silambarasan TR

People looking for online information on Obeli N Krishna, Obeli N Krishna Tweet, Pathu Thala, Silambarasan TR, Simbu will find this news story useful.