தமிழில் வெளியான என் மன வானில், நடிகர் விக்ரம் நடித்த காசி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் இயக்குநர் வினயன்.
Also Read | "எந்த ஆணும் எனக்கு தேவையில்ல".. தன்னைத் தானே திருமணம் செய்த பிரபல நடிகை.. வைரலாகும் பதிவு
இவரது இயக்கத்தில் மலையாளத்தில் உருவாகியுள்ள புதிய பிரம்மாண்ட வரலாற்று புனைவுத் திரைப்படம் 'பத்தொன்பதாம் நூட்டாண்டு (பத்தொன்பதாம் நூற்றாண்டு என தமிழில் பொருள்)'. இந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த திரைப்படத்தில் சிஜூ வில்சன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் இவருடன் அனூப் மேனன், பூனம் பஜ்வா, செம்பன் வினோத், இந்திரன்ஸ், காயடு லோஹர், கோகுலம் கோபாலன், சுதேவ் நாயர், செந்தில் கிருஷ்ணா, சுரேஷ் கிருஷ்ணா, விஷ்ணு வினய் ஆகியோர் நடித்துள்ளனர்.
ஷாஜி குமார் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய, விவேக் ஹர்ஷன் எடிட்டிங் செய்துள்ளார். எம்.ஜெயச்சந்திரன் பாடல்களுக்கு இசையமைக்கவும், சந்தோஷ் நாராயணன் பின்னணி இசையமைக்கவும் செய்துள்ளனர்.
பிரிட்டிஷ் காலத்தில் 19-ஆம் நூற்றாண்டில் கேரளத்தின் முக்கிய வீரர்களாக திகழ்ந்த ஈழவா சியாஃப்தீன் மற்றும் அரட்டுபுழா வேலாயுதம் பாணிக்கர் ஆகியோரின் கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் பிரிட்டிஷாரை எதிர்கொள்ளும் காட்சிகளும் சாதீயம் மற்றும் தீண்டாமையை மையமாகக் கொண்ட காட்சிகளும் அமையப்பெற்றுள்ளன. பான் இந்திய திரைப்படமாக உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்தை கோகுலம் கோபாலன் தயாரித்துள்ளார்.
முன்னதாக மலையாளத்தில் ஆகாஷ கங்கா, டிராகுலா 2012, ஆகாஷ கங்கா 2 உள்ளிட்ட பல படங்களை இயக்கிய இயக்குநர் வினயன், பெரும் பொருட்செலவில் பத்தொன்பதாம் நூற்றாண்டு எனும் இந்த வரலாற்று படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read | புது வீடு வாங்கிய மோகன்லால்.. விசிட் அடித்த மம்மூட்டி.. வைரலாகும் புகைப்படம்!!