அப்போ அரபிக் குத்து.. இப்போ ஆண்டவர் ஸ்டெப்… கலக்கும் அனிருத் .. வைரல் ரசிகர்கள் REELS!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தின் பத்தல பத்தல பாடல் மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Advertising
>
Advertising

Also Read | சுந்தர் சி- அனுராக் காஷ்யப் படத்தில் இணைந்த பிரபல நடிகர்…. இதுவரை வெளிவராத BTS புகைப்படங்கள்!

நான்காண்டுக்குப் பின் பெரியத்திரையில் கமல்…

கமல்ஹாசன் நடிப்பில் நான்காண்டு இடைவெளிக்குப் பிறகு  ‘விக்ரம்’ உருவாகி வருகிறது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.  அனிருத் இசையமைக்க, கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. இதனால் இந்த படத்தின் மீது எக்கச்சக்கமாக எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. கமலுடன், விஜய் சேதுபதி மற்றும்  பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இதையடுத்து விக்ரம் திரைப்படம் ஜூன் 3 ஆம் தேதி 5 மொழிகளில் பேன் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளது.

கமல் அனிருத்தின் பத்தல பத்தல…

இந்த படத்தின் மூலம் இரண்டாவது முறையாக கமல்- அனிருத் கூட்டணி இணைந்துள்ளது. ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2 திரைப்படம் உருவாக்கத்தில் உள்ளது. இந்நிலையில் விக்ரம் படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘பத்தல பத்தல’ பாடல் நேற்று இரவு 7 மணிக்கு வெளியானது. இந்த பாடலைக் கமலே எழுதிப் பாடியுள்ளார். இது கமல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பாடல் வெளியான பின்னர் சமூகவலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

வைரல் ஹிட்…

இந்த பாடல் கமலின் ஹிட் பாடலான அபூர்வ சகோதரர்கள் படத்தில் இடம்பெற்ற ‘அண்ணாத்த ஆடுறார்’ பாடலை நினைவூட்டும் விதமாக அமைந்திருந்தது. பாடலில் கமல் தனது பாணியில் வடசென்னை தமிழில் பாடியதும், சில அரசியல் கருத்துகளும் கவனிக்கும் அம்சமாக அமைந்தன. வெளியாகி தற்போது வரை 15 மில்லியன் பேருக்கு மேல் இந்த பாடலை யுடியூபில் பார்த்து ரசித்துள்ளனர்.

ஆண்டவர் ஸ்டெப் ரீல்ஸ்…

அதுமட்டுமில்லாமல் இந்த பாடலின் இடையில் இடம்பெற்ற காட்சியில் கமல் ஆடுவது போல அமைக்கப்பட்டு இருந்த நடன அசைவுகளும் ரசிகர்களிடம் வைரலாகியுள்ளன. ஆண்டவர் ஸ்டெப் என அதற்குப் பெயர் வைத்து ரசிகர்கள் பலர் அந்த மூவ்மெண்ட்களை செய்து இணையத்தில் ரீல்ஸ்களாக பதிவேற்றி வருகின்றனர். அதுமட்டுமில்லாம இந்த பாடலுக்கு நடனம் அமைத்த சாண்டியும் இதே போல ரீல்ஸ் வெளியிட அது இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

அனிருத் இசையில் சமீபத்தில் வெளியான பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக்குத்து பாடலும் இதுபோல பல ரசிகர்களால் கொண்டாடப்பட்டு ரீல்ஸ்கள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

அப்போ அரபிக் குத்து.. இப்போ ஆண்டவர் ஸ்டெப்… கலக்கும் அனிருத் .. வைரல் ரசிகர்கள் REELS! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Pathala pathala song andavar step viral fans reels videos

People looking for online information on Andavar step, Anirudh Ravichander, Fahadh, Kamal Haasan, Lokesh Kanagaraj, Pathala pathala song, Vijay Sethupathi, Vikram Movie will find this news story useful.