விக்ரம் நடிக்கும் 'தங்கலான்'.. மாறுபட்ட லுக்கில் பார்வதி பகிர்ந்த வைரல் BTS ஃபோட்டோஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

Advertising
>
Advertising

                        Images are subject to © copyright to their respective owners.

Also Read | இந்தா அடுத்த அப்டேட்.. பத்து தல படத்தின் ஓடிடி உரிமம்.. வாங்கிய பிரபல முன்னணி நிறுவனம்!

"நட்சத்திரம் நகர்கிறது" படத்தைத் தொடர்ந்து, விக்ரமை வைத்து 'தங்கலான்' படத்தை பா. ரஞ்சித் இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் ஒப்பந்தமாகியுள்ளார். ஒளிப்பதிவை கிஷோர் குமாரும், படத்தொகுப்பை செல்வாவும் கவனித்துக்கொள்கின்றனர். எஸ்.எஸ்.மூர்த்தி கலை இயக்குனராக பணிபுரியும் இந்தப் படத்தில் ஏகன் ஏகாம்பரம் ஆடை வடிவமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார்.

Images are subject to © copyright to their respective owners.

இந்தப் படத்தில், பசுபதி, மாளவிகா மோகனன், பார்வதி ஆகியோரும் நடிக்கின்றனர். இந்த படம் 18 ஆம் நூற்றாண்டு பின்னணியில் கோலார் தங்க வயலை அடிப்படையாகக் கொண்டு உருவாக உள்ளது என்று தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Images are subject to © copyright to their respective owners.

  இந்த படத்தின் ஆடியோ உரிமத்தை பிரபல டைம்ஸ் மியூசிக் நிறுவனம் (Junglee Music) கைப்பற்றியுள்ளது.  ஓடிடி உரிமத்தை பிரபல நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் ஜனவரி மாதம் முதல் தங்கலான் படத்தின் படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு தளத்தில் இருந்து நடிகை பார்வதி திருவொத்து BTS  புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

Images are subject to © copyright to their respective owners.

ஒப்பனை செய்யும் புகைப்படங்கள் மற்றும் ஒப்பனையை களைக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பார்வதி திருவொத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பார்வதியின் மாறுபட்ட தோற்றம் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Also Read | தனுஷ் நடிக்கும் 'வாத்தி'.. பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா.. எப்போ? எங்கே? முழு விவரம்

தொடர்புடைய இணைப்புகள்

Parvathy Trivothu Shared Thangalaan Movie BTS Photos

People looking for online information on Parvathy Thiruvothu, Parvathy Trivothu, Thangalaan, Thangalaan Movie BTS Photos will find this news story useful.