PONNIYIN SELVAN : நந்தினியுடன் பழுவேட்டரையர்கள்... "ONE MORE கேட்கா EGOவுடன்.." பார்த்திபன் பகிர்ந்த BTS

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அமரர் கல்கியின் பகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கியுள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | VTK வெற்றியை தொடர்ந்து நடிகர் சிம்புவிற்கு தயாரிப்பாளர் கொடுத்த சொகுசு கார்..!

சோழப் பேரரசின் அரியணைக்கு வரும் தொடர் ஆபத்துகளும், வீரர்களுக்கும் சதிகாரர்களுக்கும் இடையில் நிகழும் போராட்டங்களும், சாதனைகளும், நகைச்சுவையும், தியாகங்களும் கொண்ட விறுவிறுப்பான கதையான “பொன்னியின் செல்வன்” கதையை திரையில் காண பல கோடி ரசிகர்கள் காத்துக்  கொண்டிருக்கிறார்கள்.

இந்த படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்து வருகிறார்,  கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிந்துள்ளார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை செய்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரமும், வந்தியத்தேவனாக நடிகர் கார்த்தியும், அருண்மொழிவர்மனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தின் புகழ்பெற்ற பெண் கதாபாத்திரங்களான நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர். பெரிய பழுவேட்டரையர் மற்றும் சின்ன பழுவேட்டரையர் வேடத்தில் முறையே சரத்குமார் மற்றும் பார்த்திபன் நடிக்கின்றனர்.  சமுத்திரகுமாரி பூங்குழலி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லெஷ்மியும், வானதி கதாபாத்திரத்தில் நடிகை சோபிதா துலிபாலாவும் நடிக்கின்றனர்.

இந்நிலையில் ஐஸ்வர்யா ராயுடனும் சரத்குமாருடனும் இணைந்து ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தமது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள நடிகரும் இயக்குநருமான பார்த்திபன், “ஐஸ் வாரியம் ! கற்றுக் கொள்ள… காற்று கொள்ளும் மூங்கில் துளைகளில் இருந்து இசை வரும் என கோடியாய் கொட்டிக் கிடக்கின்றது இப்பூமியில். அப்படி இப்பெண்ணிடமிருந்து… தாயானப் பிறகும், தான் விரும்பும் கலையை தொடர, ஆரோக்கியத்தை+அழகை காத்திட கடும் முயற்சியும், விடா பயிற்சியும் செய்கிறார்.

அழகென நான் காண்பது… பிறைநிலவு வானில் இருந்து மறையுமுன்னே முழுநிலவாய் படப்பிடிப்பு தளத்தில் நுழைபவர்  வசனங்களை (இடை வரும் புன்னகை உட்பட) மனப்பாடம் செய்து one more கேட்கா egoவுடன் தயாராகிவிட்டு, பின் அனைவரிடமும்(selfie) அன்பொழுக பழகுகிறார்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

லைகா தயாரித்திருக்கும் இத்திரைப்படம் 2 பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. இதில் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1” வரும் 2022 செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வருகிறது.

Also Read | விக்ரம் டூ இந்தியன்-2 TRANSFORMATION.. விலையுயர்ந்த காரை டிரெய்னருக்கு பரிசளித்த கமல்ஹாசன்! மாஸ்

தொடர்புடைய இணைப்புகள்

Parthiban Sarathkumar Aishwarya rai Viral Ponniyin Selvan BTS

People looking for online information on Aishwarya rai, Parthiban, Ponniyin Selvan, Ponniyin Selvan BTS, Ponniyin Selvan part 1, PS1, Sarathkumar will find this news story useful.