விஷால் நடிப்பில் வெளியாகியுள்ள ‘அயோக்யா’ திரைப்படம் குறித்த தனது கருத்துக்கு நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் விளக்கமளித்துள்ளார்.
அறிமுக இயக்குநர் வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால், ராஷி கண்ணா, பார்த்திபன், சோனியா அகர்வால், ராதாரவி, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘அயோக்யா’ திரைப்படம் பல இடையூறுகளுக்கு பின் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இப்படத்தில் வில்லனாக நடித்துள்ள நடிகர் பார்த்திபன், அயோக்யா திரைப்படத்தின் மீது வைத்த கதை திருட்டு குற்றச்சாட்டு தொடர்பான ட்வீட் சமூக வலைதளங்களில் வைரலாகி படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அவரது ட்வீட்டில், “'அயோக்கியா'த்த்தனம்! 94-ல் வெளியான என் ginal ginal original 'உள்ளே வெளியே'படத்தை In&out லவுட்டிTemper'(Rights பெறாமல்) தெலுங்கில் Hit ஆக்கி தமிழிலும் தற்போது!அதில் என்னையும் நடிக்க வைத்து என்ன ஒரு'அ-தனம்'?குற்ற உணர்ச்சி இல்லாமல் எப்படி?வழக்கு செய்யாமல்,பெருமையுடன் பதிவிடுகிறேன்” என பதிவிட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து, “ஒப்பீட்டால் ரிப்பீட்டாகும் ரசிகர்கள்! 'அயோக்கியா'-என் பதிவு ஒரு விளம்பர யுத்தி என்பதை யாராவது கண்டுபிடித்து விடுவார்களோ என யோசித்துக் கொண்டிருந்தேன். நல்ல வேளை!. 'டெம்பர்' வரும்போது தெரியாது. தமிழாகும் போது தெரியும். இதை கூடிப்பேசி கூத்தடிப்போம் ஷூட்டிங் ஸ்பாட்டில்” எனவும் ட்வீட்டியுள்ளார்.
மேலும், “விஷாலுக்கும் எனக்கும் என்றுமே பிரச்சனை இல்லை! இப்போதும் வழக்காட வரவில்லை. வழக்கமான என் (100%உண்மையான) அக்மார்க் அக்குறும்பே! கெட்ட போலீஸ். ஒரு நல்ல போலீஸால் திருந்துவதன் விளை(யும்)வுகள்! இந்த மையக் கரு இரண்டிலும் ஒன்றே. சந்தேகம் என்றால் பாருங்க.” என்றும் கூறியுள்ளார்.