LATEST: ஒத்த செருப்பு இந்தி ரீமேக்கில் நடிக்கும் மணிரத்னம் பட ஹீரோ! வெளியான சூப்பர் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

2019 ஆம் ஆண்டு செப்டெம்பர் 20ல் வெளியான ஒத்த செருப்பு திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல  வரவேற்பை பெற்றது.

parthiban oththa seruppu hindi remake shooting update

மேலும் சிறந்த படம் மற்றும் சிறந்த ஒலிப்பதிவிற்கான தேசிய விருதை வென்றது. இந்த படத்தின் பின்னணி இசையை இசையமைப்பாளர் சி. சத்யாவும், ஒரு பாடலை சந்தோஷ் நாராயணனும் இசையமைத்திருந்தனர்.  ஒளிப்பதிவாளராக ராம்ஜியும், எடிட்டராக சுதர்சனும் பணிபுரிந்தனர். இந்தப் படத்தை பார்த்திபன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான பயோஸ்கோப் பிலிம் பிரேமர்ஸின் கீழ் தயாரித்து இயக்கி இருந்தார்.

parthiban oththa seruppu hindi remake shooting update

இந்த படத்தின் இந்தி ரீமேக் பற்றி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை பார்த்திபனே இயக்குகிறார். ஒளிப்பதிவாளராக ராம்ஜியும், எடிட்டராக சுதர்சனும் பணிபுரிய உள்ளனர். இந்தி சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் இந்த படத்தை தயாரிக்கிறார்.

மணிரத்னம் இயக்கிய குரு, யுவா, ராவண் படங்களில் நடித்த அபிஷேக் பச்சன் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று (08.12.2021) சென்னையில் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Parthiban oththa seruppu hindi remake shooting update

People looking for online information on Abhishek Bachchan, Amitabh Bachchan, Oththa Seruppu Size 7 will find this news story useful.