அமரர் கல்கியின் பகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கியுள்ளார்.
லைகா தயாரித்திருக்கும் இத்திரைப்படம் 2 பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. இதில் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1” 2022 செப்டம்பர் 30-ஆம் தேதி ரிலீஸ் ஆகி திரையில் ஒளிபரப்பாகி வருகிறது.
சோழப் பேரரசின் அரியணைக்கு வரும் தொடர் ஆபத்துகளும், வீரர்களுக்கும் சதிகாரர்களுக்கும் இடையில் நிகழும் போராட்டங்களும், சாதனைகளும், நகைச்சுவையும், தியாகங்களும் கொண்ட விறுவிறுப்பான கதையாக “பொன்னியின் செல்வன்” திரையில் ஒளிபரப்பாகிறது. இந்த படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்து வருகிறார், கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிந்துள்ளார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை செய்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரமும், வந்தியத்தேவனாக நடிகர் கார்த்தியும், அருண்மொழிவர்மனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தின் புகழ்பெற்ற பெண் கதாபாத்திரங்களான நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர். பெரிய பழுவேட்டரையர் மற்றும் சின்ன பழுவேட்டரையர் வேடத்தில் முறையே சரத்குமார் மற்றும் பார்த்திபன் நடிக்கின்றனர். சமுத்திரகுமாரி பூங்குழலி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லெஷ்மியும், வானதி கதாபாத்திரத்தில் நடிகை சோபிதா துலிபாலாவும் நடிக்கின்றனர்.
இவர்களுள் ஆதித்த கரிகாலன் மற்றும் அருண் மொழி வர்மன் கேரக்டர்களின் சகோதரி கதாபாத்திரமான குந்தவை கதாபாத்திரத்தில் த்ரிஷா நடித்திருந்தார். சோழ சாம்ராஜ்ஜியத்தின் இளவரசியான குந்தவையை த்ரிஷா வடிவில் பலரும் அறிந்துகொண்டுள்ளனர். இந்நிலையில் இன்னொரு குந்தவை குறித்த செய்தி இணையத்தில் வைரலாகி வருறது. உண்மையில் இவர் குந்தவை அல்ல. குந்தவி. இந்த குந்தவி புகைப்படத்தில், கல்கி எழுதிய பார்த்திபன் கனவு நாவல் படமாக்கப்பட்டபோது அதில் குந்தவியாக நடித்த வைஜெயந்தி மாலா.
பார்த்திபன் கனவு படத்தில் பார்த்திபன் என்ற சோழ அரசனாக அசோகனும், சோழ இளவரசன் விக்கிரமனாக ஜெமினி கணேசனும், பல்லவ மன்னன் மாமல்லனாக எஸ்.வி.ரங்காராவும், பல்லவ மன்னன் மகள் குந்தவையாக (கல்கியின் மூலக் கதையில் குந்தவி) "வைஜயந்தி மாலாவும் நடித்திருப்பார்கள். ஆம், கல்கி எழுதிய பார்த்திபன் கனவு நாவலில், நரசிம்ம பல்லவ மன்னன் மகளாக வரும் குந்தவி, விக்கிரம சோழனை காதலிப்பார்.
ஆனால் இதற்கப்புறம் முன்னூறு ஆண்டுகள் கழித்து, பொன்னியின் செல்வனில், அருள்மொழி வர்மனின் தங்கையாக, அதாவது குந்தவையாக பிறந்து வந்தியத்தேவனை மணந்திருப்பார். வரலாற்று அடிப்படையிலும் நரசிம்ம பல்லவன் ஏழாம் நூற்றாண்டு. ராஜ ராஜ சோழன் பத்தாம் நூற்றாண்டு என்று கூறப்படுகிறது.