புத்தக திருவிழா.! சிறைவாசிகளுக்காக ‘சின்ன பழுவேட்டரையர்’ பார்த்திபன் நெகிழ்ச்சி காரியம்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ்நாடு அரசு முன்னெடுத்த இந்த சர்வதேசப் புத்தகக் கண்காட்சியில் 30 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்ட, 365 புத்தகங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

Advertising
>
Advertising

Also Read | Gautami : அட.. நடிகை கவுதமிக்கு இவ்ளோ பெரிய மகளா..? ட்ரெண்ட் ஆகும் ஃபோட்டோஸ்..

சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ அரங்கில் கடந்த 6-ம் தேதி முதல் நடைபெற்ற இந்த புத்தக கண்காட்சி தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கமான பபாசியின் சார்பில் நடத்தப்பட்டது. இப்புத்தகக் கண்காட்சியில் தமிழ்ப் பதிப்பாளர்கள் பேரார்வத்துடன் கலந்துகொண்டனர். சென்னைப் புத்தகக் காட்சியை நடத்தும் பபாசி அமைப்பு 70களில் 25-30 கடைகள் என்று தொடங்கியது. பின்னர் 90களில் 150-200 என்று அதிகரித்தது. தற்போது மிகப்பெரிய விளையாட்டு மைதானத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் என வளர்ந்துள்ளது.

தமிழ்நாடு அரசின் இலக்கியத் திருவிழா, புத்தகக் காட்சி, சங்கமம் எனப் பல்வேறு நிகழ்வுகளுள் ஒன்றான இந்த புத்தக திருவிழாவின் கவனம் நடந்து முடிந்த பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி வரை வந்துள்ளது. ஆம், எழுத்தாளர்கள் எஸ்.ராமகிருஷ்ணன், கவிஞர் மகுடேஸ்வரன் ஆகியோர் பிக்பாஸ் ஃபினாலேவில் இடம்பெற்றனர்.  இந்நிலையில்தான் நடந்து முடிந்த இந்த சென்னை புத்தக கண்காட்சியில் ஒவ்வொரு அரங்காக இயக்குநர் பார்த்திபன் சென்று சிறைவாசிகளுக்காக மடிப்பிச்சையாய் புத்தகங்களை சேகரித்த வீடியோ வைரலானது.

ஆயிரமாயிரம் அரங்குகளில்  இடம் பெற்ற லட்சோபலட்சம் புத்தகங்களில் அவற்றை எழுதிய எழுத்தாளர்களின் கையொப்பம் பெற்று வாசகர்கள் புத்தகங்கள் வாங்கிச் சென்றனர்.  இதில்தான், ஒவ்வொரு அரங்கிலும் சென்ற பார்த்திபன் துண்டை நீட்டி மடிப்பிச்சை கேட்டபடி சிறைவாசிகளுக்காக புத்தகம் வேண்டி பல புத்தகங்களை பெற்றார்.  கடைசியாக அவற்றை திரட்டி, கூண்டு வானம் எனும் ஒரு புத்தக அரங்கில் சேர்த்தார். மடிப்பிச்சை ஏந்தி சிறைக்கைதிகளுக்கு 1000 புத்தகங்களைத் திரட்டியது தமக்கு மகிழ்ச்சி என இது தொடர்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் பார்த்திபன் கடைசியாக சிங்கிள் ஷாட் நான் லீனியர் திரைப்படமான இரவின் நிழல் படத்தை இயக்கி நடித்தார். அண்மையில் மணிரத்னம் இயக்கத்திலான பொன்னியின் செல்வன் படத்தில் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | “என் வேலைய நான் செஞ்சேன்.. நாராயணா.. நாராயணா” .. மணியை கலாய்ச்ச கமல் 😅 GP முத்து Reply

தொடர்புடைய இணைப்புகள்

Parthiban collected books for prisoners Chennai Book Fair

People looking for online information on Book fair, Chennai Book Fair, Parthiban will find this news story useful.