போடுறா வெடிய! சிவகார்த்திகேயனின் 'BLOCKBUSTER’ படத்தின் PART - 2; அறிவித்த இயக்குநர்! - என்ன படம் தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் சிவகார்த்திக்கேயன். 

Part 2 of Sivakarthikeyan's film Director announced

தமிழ் சினிமாவில் இவர் படங்கெளுக்கென்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகி வருகிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ப்ரியங்கா அருள் மோகன், வினய், யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் தயாராகியுள்ள படம் 'டாக்டர்' படம் வரும் அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி வெளியாக உள்ளது. 

Part 2 of Sivakarthikeyan's film Director announced

டாக்டர் (Doctor) திரைப்படம் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் வெளியாக உள்ளது. தமிழில் வெளியாகும் அதே நாளில் தெலுங்கிலும் வருண் டாக்டர் என்ற பெயரில் அக்டோபர் 9 ஆம் தேதி வெளியாகிறது. வளர்ந்து வரும் ஹீரோக்களில் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் சிவகார்த்திக்கேயனுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. டாக்டர் படத்தை தொடர்ந்து அயலான், டான் படங்கள் திரைக்கு வர இருக்கின்றன.

இந்நிலையில் இயக்குனர் பொன்ராம் தனது டிவிட்டர் பக்கத்தில் கீழ்கண்டவாறு கூறியுள்ளார். "#VaruthapadathaValiparSangam Part 2 வருவது உறுதி, சிவகார்த்திகேயன் சார் maturity ஆகிவிட்டார், அடுத்து வளர்ந்து வரும் இளம் கதாநாயகர்களை வைத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் எடுப்போம். போட்றா வெடிய… #vvs2 " என்று கூறியுள்ளார். 

சில தினங்களுக்கு முன் நடிகர் சிவகார்த்திக்கேயன் "வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கவே கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். அது ஒரு எபிக் படம்! அதைத் திரும்ப எடுக்கவே முடியாது."என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இயக்குனர் பொன்ராம் இது போல டிவீட் செய்துள்ளார். 

இயக்குனர் பொன்ராம் தற்போது சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதியை வைத்து பெயரிடபடாத ஒரு படத்தை இயக்கி வருகிறார். இவர் இதற்கு முன் சிவகார்த்திக்கேயனை வைத்து வருத்தபடாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா படங்களை இயக்கி இருந்தார். இதில் வருத்தபடாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. 

சிவகார்த்திகேயன், சத்யராஜ், சூரி, ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில், டி. இமான் இசையில் 2013-ம் ஆண்டு வெளியான 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படம் மாபெரும் வெற்றி பெற்றது. 

 

தொடர்புடைய இணைப்புகள்

Part 2 of Sivakarthikeyan's film Director announced

People looking for online information on Ponram, Sathyaraj, Sivakarthikeyan, Soori, Varuthapadatha Valibar Sangam, VVS will find this news story useful.