நடிகர் அஜித் நடிப்பில் உருவாகவிருக்கும் ‘வலிமை’ திரைப்படத்தின் பணிகள் பூஜையுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தொடங்கியது.

மறைந்த நடிகை ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரிப்பில் வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்திற்கும், அதில் வழக்கறிஞராக நடித்த அஜித்திற்கும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது.
ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடித்த ‘பிங்க்’ திரைப்படத்தின் ரீமேக்கான இப்படத்தில் அஜித்துடன் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா தாரியங், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜுன் சிதம்பரம், சுஜித், அஸ்வின் ராவ்,டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கோர்ட் ரூம் டிராமாவான இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருந்தார்.
இதனையடுத்து, போனி கபூரின் பேவ்யூ புராஜக்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அஜித் நடிக்கும் ‘வலிமை’ திரைப்படத்திற்காக அஜித், ஹெச்.வினோத், யுவன், நீரவ் ஷா ஆகியோர் இணைந்துள்ளனர். இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது.
மேலும் இப்படத்தில் பிரணிதி சோப்ரா மற்றும் தேசிய விருது பெற்ற கலை இயக்குனர் தோட்டா தரணி இணைந்ததாக செய்திகள் வெளியானது இதுதொடர்பாக எங்களது நெருங்கிய விட்டார்களை அணுகியபோது அவை முற்றிலும் நம்பகத்தன்மையற்ற செய்தி என்றனர் மேலும் நடிகர்,நடிகை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது