பிரபல பாலிவுட் நடிகர் பங்கஜ் திரிபாதி வாழ்க்கை குறித்து பேசும் வீடியோ ஒன்றை ஐபிஎஸ் அதிகாரி தீபான்ஷு காப்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். இது பலரையும் நெகிழ்ச்சியடைய செய்திருக்கிறது.
Also Read | நடிகர் ராஜூ ஸ்ரீவஸ்தவாவின் உடலை புதுமையான வழியில் பிரதே பரிசோதனை செய்த மருத்துவர்கள்.!
பங்கஜ் திரிபாதி
1976 ஆம் ஆண்டு பிறந்த பங்கஜ் திரிபாதி தனது இயல்பான நடிப்பிற்கு பெயர்பெற்றவர். தேசிய விருது வென்ற திரிபாதி கேங்ஸ் ஆஃப் வசெய்பூர், மிர்சாபூர் உள்ளிட்ட பல பிரபல வெப் சீரிஸிலும் நடித்திருக்கிறார். இந்நிலையில், வாழ்க்கையில் வாய்ப்புகள் கிடைக்காத நேரத்தில் நாம் துவண்டு போய்விடக்கூடாது எனவும் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும் எனவும் பங்கஜ் வலியுறுத்தும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை ஐபிஎஸ் அதிகாரியான தீபான்ஷு காப்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
தீபான்ஷு காப்ரா
சத்தீஸ்கர் மாநிலத்தின் மக்கள் தொடர்பு மற்றும் போக்குவரத்துத்துறை கமிஷனராக இருக்கிறார் திபான்ஷு காப்ரா. ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் ஆக்டிவாக இயங்கிவரும் இவர் பொது மக்களுக்கான அறிவுரைகள், தன்னம்பிக்கை ஏற்படுத்தும் பதிவுகள், வெடிச்சிரிப்பை வரவழைக்கும் காமெடி வீடியோக்களை பகிர்வது வழக்கம். அந்த வகையில் இவர் தற்போது தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
வைரல் வீடியோ
இந்நிலையில், தீபான்ஷு காப்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில் பங்கஜ் திரிபாதி முக்கிய அட்வைஸ் ஒன்றை வழங்கியுள்ளார். அதில் பங்கஜ் திரிபாதி,"பாலங்கள் இல்லாத ஆற்றை கடக்க நினைக்கும் ஒருவர் எப்படியும் நீச்சலடிக்க கற்றுக்கொள்வார் என எப்போதும் நான் சொல்வது உண்டு. ஏனெனில் தனக்கு வசதிகளோ, சலுகைகளோ கிடைக்கவில்லை என யாரும் மனச்சோர்வு அடைந்திட கூடாது. அப்படியான சூழ்நிலைகள் உங்களை வலிமையானவர்களாக நல்ல மனிதராக உருவாக்கக்கூடும் என்பதை உணருங்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோவை பகிர்ந்த தீபான்ஷு காப்ரா," இது முக்கியமான புரிந்துகொள்ள வேண்டியதாகவும் ஆழமான செய்தியாகவும் இருக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுவரையில் இந்த வீடியோவை 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்திருக்கின்றனர்.
Also Read | மருத்துவமனையில் நடிகர் போண்டா மணி நேரில் சந்தித்த அமைச்சர் மா.சுப்ரமணியன்..!