கடந்த 28 ஆம் தேதி நடைபெற்ற 94 வது ஆஸ்கார் விருது விழாவில், ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் தனது மனைவி பற்றி பேசிய நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக்கை அறைந்தார். இது சமூக வலை தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
3 Years of Super Deluxe: இயக்குனருக்கு மனதார நன்றி சொன்ன விஜய் சேதுபதி! நெகிழ்ச்சியான தருணம்
ஆஸ்கார்
திரைத்துறையில் அளிக்கப்படும் மிக முக்கிய விருதுகளில் ஒன்று ஆஸ்கார். உலகம் முழுவதும் வெளியாகும் படங்களிலிருந்து சிறந்தவற்றை தேர்ந்தெடுத்து கலைஞர்களுக்கு விருது அளிக்கும் இந்த விழா ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவில் நேற்று நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த வருடத்திற்கான ஆஸ்கார் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த 28 ஆம் தேதி நடைபெற்றது. ஆஸ்கார் விழாவில் மொத்தம் 23 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன.
கோபமடைந்த ஸ்மித்
தொகுப்பாளரும் நகைச்சுவை நடிகருமான கிறிஸ் ராக், சிறந்த நடிகருக்கான பரிந்துரைக்கப்பட்ட வில் ஸ்மித்தின் மனைவியான நடிகை ஜடா பிங்கெட் ஸ்மித்தின் தலைமுடி குறித்து பேசினார். இதனால் கோபமடைந்த ஸ்மித் மேடைக்கு சென்று ராக்கை பளார் என்று அறைந்துவிட்டு கீழே இறங்கி சென்றார். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
விவாதம்
இந்நிலையில், கிறிஸ் ராக்கை வில் ஸ்மித் தாக்கிய விவகாரம் சமூக வலைத் தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இதுகுறித்து தமிழகத்தை சேர்ந்த ஊடகவியலாளர் பனிமலர் பன்னீர் செல்வம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றினை எழுதியிருக்கிறார். அதில், நகைச்சுவை என்ற பெயரில் உருவ கேலி செய்வதை ஏற்றுக்கொள்ளமுடியாது என குறிப்பிட்டிருக்கிறார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,"பல காமெடி நடிகர்கள் மற்றும் தொலைக்காட்சியில் நகைச்சுவை செய்பவர்கள், பட்டிமன்ற பேச்சாளர்கள் தங்களையும், தன் மனைவியையும், பிறரையும் வரைமுறை இல்லாமல் கிண்டல் செய்கிறார்கள். நாமும் அதற்கு சிரிக்கிறோம். அது தவறு என்றே உணருவதில்லை. காமெடியை காமெடியா பார்க்கத் தெரியாதா? என்று வேறு கேட்பார்கள். உங்களுக்கு காமெடியாக இருப்பது பிறரை காயப்படுத்தினால் அதற்கு பெயர் நகைச்சுவை இல்லை, துன்புறுத்தல்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கணவன் மற்றும் மனைவி இடையே நடைபெறும் உருவ கேலிகளும் தவிர்க்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ள அவர்," கணவர்கள் உங்களது மனைவியை நீங்கள் உருவ கேலி செய்தாலும் பிறர் அதை செய்யும்போது அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தாலும் அது தவறுதான். இது 4 சுவர்களுக்கு உள்ளே நடந்தாலும் அது தவறே ஆகும். இது பெண்களுக்கும் பொருந்தும்" எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மன்னிப்பு
ஆஸ்கார் மேடையில் கிறிஸ் ராக்கை தாக்கியதற்காக நடிகர் வில் ஸ்மித் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வில் ஸ்மித்,"பொதுவெளியில் உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் கிறிஸ். நான் வரம்பு மீறிவிட்டேன், நான் தவறு செய்திருக்கிறேன். அன்பும் கருணையும் நிறைந்த உலகில் வன்முறைக்கு இடமில்லை" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
"என்னா வெயிலு.. அடுத்த மூனு மாசத்துக்கு.." பிகினி உடையில் கீர்த்தி பாண்டியன் பகிர்ந்த வைரல் PHOTOS..