விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்த தொடரில் மீனா என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை ஹேமா நிஜத்திலும் கர்ப்பமாக இருக்கிறார். சமீபத்தில் அவருக்கு தொடரில் உள்ள நடிகர்கள் மற்றும் விஜய் டிவி பிரபலங்கள் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தியது மிகவும் வைரலானது.

இந்நிலையில் இதற்கு பிறகு ஹேமா தொடரில் இருந்து விலகி விடுவாரா என்பது போன்ற கேள்விகள் ரசிகர்களிடையே எழுந்தது. இதற்கு பதிலளிக்கும் வகையில் அவர் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் "பலரும் என்னிடம் நான் சீரியலில் இருந்து விலகப் போகிறேனா என்று கேட்கிறார்கள். அப்படி அல்ல. உங்கள் அனைவருக்கும் சீக்கிரமே ஒரு பாசிட்டிவான செய்தி காத்திருக்கிறது" என்று கூறியுள்ளார். அவர் கூறும்படி பார்த்தால் சிறிது காலத்திற்கு சீரியலில் வேறேனும் மாற்றம் செய்யப்படலாம், ஆனாலும் மீனா கதாபாத்திரம் மீண்டும் தொடரும் என்றே தெரிகிறது. இந்த செய்தி அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.