நடிகை சித்ராவின் மறைவு... பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா வெளியிட்ட பதிவு... "போடி முடிஞ்சா இப்பவே.."

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் தொடர் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை சித்ரா. இவர் இதற்கு முன்பு பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராகவும், சீரியல்களிலும் நடித்து இருந்தார், இருந்தாலும் இந்த தொடர் மூலம் வேற லெவல் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். இந்நிலையில் அவர் மரணமடைந்த செய்தி ரசிகர்களை மிகவும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அவருடைய பாசிட்டிவ் குணம் தான் ரசிகர்களின் பேவரைட்டாக இருந்தது.

இந்நிலையில் இந்த முடிவை சித்ராவிடம் இருந்து யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்நிலையில் அவருடன் நடித்த நடிகர், நடிகைகளும், விஜய்டிவி பிரபலங்களும் தற்போது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது பற்றி அவருடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் உடன் நடித்த நடிகை மற்றும் அவருக்கு நெருக்கமான ஹேமா சதீஷ் தற்போது பதிவிட்டுள்ளார். அவர் கூறும் பொழுது "நீ இப்படி பண்ணி இருக்க கூடாது. எதுக்குடி? எனக்கு சொல்ல வார்த்தைகளே இல்லை. போடி. முடிந்தால் இப்பவே திரும்ப வந்து விடு சித்ரா" என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

நடிகை சித்ராவின் மறைவு... பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா வெளியிட்ட பதிவு... "போடி முடிஞ்சா இப்பவே.." வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Pandiyan stores meena on chithra demise நடிகை சித்ராவின் மறைவு

People looking for online information on Chithra, Pandiyan Stores will find this news story useful.