நடிகை சித்ரா திடீர் மரணம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன் வெளியிட்ட பதிவு..."இது பதில் இல்ல"

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் தொடர் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை சித்ரா. இவர் இதற்கு முன்பு பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராகவும், சீரியல்களிலும் நடித்து இருந்தார், இருந்தாலும் இந்த தொடர் மூலம் வேற லெவல் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.

இந்நிலையில் அவர் மரணமடைந்த செய்தி ரசிகர்களை மிகவும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அவருடைய பாசிட்டிவ் குணம் தான் ரசிகர்களின் பேவரைட்டாக இருந்தது. இந்நிலையில் இந்த முடிவை சித்ராவிடம் இருந்து யாரும் எதிர்பார்க்கவில்லை இந்நிலையில் தற்போது அவருடைய சீரியல் துணையான குமரன், சித்ராவின் மரணத்திற்கு இரங்கல் பதிவிட்டுள்ளார். அவர் கூறும் பொழுது "உன்னுடைய துணிச்சலான குணத்திற்கு தான்  நீ பெயர் பெற்றவள். பல பெண்களுக்கு நீ ஒரு உத்வேகமாக இருந்தாய். நீ திரும்ப போராடியிருக்க வேண்டும். இது பதில் அல்ல. இது எப்போதுமே அதற்கு பதில் அல்ல" என்று வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Pandiyan stores kumaran on chithra death பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன் பதிவு

People looking for online information on Chithra, Pandiyan Stores will find this news story useful.