சித்ராவுக்கு அஞ்சலி செலுத்திய பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்... மனதை உடைக்கும் வீடியோ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை சித்ரா. ஆரம்பத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றினாலும், அவரை புகழின் உச்சிக்கு அழைத்துச் சென்றது பாண்டியன் ஸ்டோர் தொடர் தான். அந்த தொடரில் வரும் குமரன், முல்லை ஜோடிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இப்படி இருக்கும்போது சித்ரா சமீபத்தில் மரணமடைந்த செய்தி கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்கள் அவரது இறுதி அஞ்சலியில் பங்குகொண்டு அவருக்கு அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் இன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷூட்டிங் நடக்கும் வீட்டில் சித்ராவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அவரைப் பற்றி உருக்கமான கவிதை ஒன்றை வாசித்த நடிகர் நடிகைகள் கண்ணீர்விட்டு அவருக்காக கதறுவதை பார்க்க முடிந்தது. அதேபோல இன்று காலை அவரது சீரியல் ஜோடியான குமரன் கண்ணீருடன் அவருக்கு ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார். சித்ராவின் மரணத்துக்கான காரணத்தை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். சீக்கிரமே அதில் முக்கியமான தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சித்ராவுக்கு அஞ்சலி செலுத்திய பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்... மனதை உடைக்கும் வீடியோ..! வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Pandiyan stores family bids goodbye to chitra சித்ராவுக்கு அஞ்சலி செலுத்திய பாண்டியன் ஸ்டோர்ஸ்

People looking for online information on Chithra, Pandiyan Stores will find this news story useful.