நடிகர் சிவகார்த்திகேயனின் இன்று தமது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று நேற்று நாளை பட இயக்குநர் ரவிகுமாரின் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், சிவகார்த்திகேயன் நடித்ஹ்ட அயலான் திரைப்படத்தில் ‘வேற லெவல் சகோ’ பாடல் இன்று வெளியாகியுள்ளது.
இதேபோல், அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தியின் இயக்கத்தில் லைகா புரொடக்ஷனில் சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் திரைப்படத்தின் பூஜை மிக அண்மையில் நடந்தது. இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் குக் வித் கோமாளி பிரபலமான பாடகி சிவாங்கி, இயக்குநர் மற்றும் படக்குழுவினருடன் சிவகார்த்திகேயன் பிறந்த நாள் கொண்டாடினார்.
இதனிடையே சிவகார்த்திகேயன் நடித்த மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, நம்ம வீட்டு பிள்ளை படங்களை இயக்கிய இயக்குநர் பாண்டிராஜ் தமது பக்கத்தில் ஒரு ட்வீட்டை பகிர்ந்துள்ளார்.
அந்த ட்வீட்டில் இயக்குநர் பாண்டிராஜ், சிவகார்த்திகேயன் நடித்த நம்ம வீட்டு பிள்ளை படத்தில் ஷூட்டிங் செட்டில் ஜமுக்காலத்தில் நடிகர்கள் சூரி மற்றும் சுப்பு பஞ்சுவுடன் அயர்ச்சியில் உறங்கும் புகைப்படத்தை பதிவிட்டு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.