நடிகர் சூர்யா தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக 9 இயக்குநர்கள் இயக்கும் ஆந்தாலாஜி சீரிஸான நவராசாவில் கவுதம் மேனன் இயக்கும் பகுதியில் சூர்யா நடிக்கிறார். இந்த படம் வரும் ஆகஸ்டு மாதம் வெளியாகும் என்கிற தகவலை இப்பகுதியின் ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் தம் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

முன்னதாக சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடித்த பிளாக் பஸ்டர் படமான சூரரைப் போற்று நேரடியாக அமேசானில் வெளியாகி ஹிட் அடித்தது. இதனைத் தொடர்ந்து நடிகர் சூர்யா வெற்றி மாறனின் வாடிவாசல் படத்தில் நடிக்கிறார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் உருவாகும் இந்த படம் குறித்து அண்மையில் தமது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்த ஜி.வி.பிரகாஷ் குமார், இந்த படம் தொடர்பான நாம் எதிர்பாராத அறிவிப்புகள் நிறையவே வந்துகொண்டிருப்பதாக குறிப்பிட்டார்.
இந்நிலையில் இயக்குநர் பாண்டிராஜின் படம் இயக்கத்தில் சூர்யா நடித்து வருகிறார். இந்த படத்துக்காக சூர்யா40 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டு குறிப்பிடப் படுகிறது. இந்த படத்தின் கதாநாயகியாக சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் நடித்ததன் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகவுள்ள நடிகை பிரியங்கா அருள் மோகன் தான், நடிக்கவுள்ளார்.
இதனிடையே இயக்குநர் பாண்டிராஜின் பிறந்தநாளை முன்னிட்டு, பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளை கூறினர். அப்போது தமது வாழ்த்து சொன்ன சூரியின் ட்வீட்டை ரீட்வீட் செய்த பாண்டிராஜ் நன்றி ‘அவனி சூளாமணி’ என்றும் தமக்கு வாழ்த்து சொன்ன பிரியங்கா மோகனுக்கு ‘நன்றி ஆதினி’ என்றும் ரிப்ளை செய்திருந்தார்.
இதன் மூலம் அவர்களின் கதாபாத்திர பெயர்கள் தெரியவந்துள்ளன. இதேபோல் தமக்கு வாழ்த்து சொன்ன இமானிடம், என இயக்குநர் பாண்டிராஜ் நன்றி சார் என்று சொன்னதுடன் ஒரு முக்கிய கோரிக்கையை ஜாலியாக முன்வைத்துள்ளார்.
அதில், “சாங் எதாவது Final பண்ணி கொடுத்தீங்கன்னா.. single ரிலீஸ் பண்ணலாம்... அப்டேட்.. அப்டேட்னு கேட்டுகிட்டே இருக்காங்க!” என்று குறிப்பிட்டுள்ளார்.