VIDEO: பாலகிருஷ்ணா ஸ்டைலில் "DON'T TROUBLE" பஞ்ச் டயலாக்கை பேசி அசத்தும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

இந்த சீரியலில் பிரபல அண்ணி கேரக்டரில், அதாவது தனம் கேரக்டரில் நடித்து வருபவர் சுஜிதா. நடிகை சுஜிதா சிறு வயதில் இருந்தே திரைப்படங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தனமாகவும் நடிகை சுஜிதாவாகவும் பிரபலமான இவருக்கு ரசிகர்கள் ஏராளம். பூவிழி வாசலிலே உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள சுஜிதா, தற்போது தெலுங்கில் வதினமா எனும் பெயரில் சீரியலாக ரீமேக் ஆகும் தெலுங்கு பாண்டியன் ஸ்டோர்ஸிலும் சீதா எனும் கேரக்டரில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் இடைவேளை நேரத்தில் பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் பாப்புலர் பஞ்ச் டயலாக்கான ‘டோண்ட் ட்ரபுள் தி ட்ரபுள்.. இஃப் யூ ட்ரபுள் தி ட்ரபுள்.. ட்ரபுள் ட்ரபுள்ஸ் யு.. ஐ அம் நாட் தி ட்ரபுள்.. ஐ அம் தி ட்ரூத்!’ என்கிற வசனத்தை, கையில் ஒரு கத ஆயுதத்தை தூக்கிக் கொண்டு பேசுகிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இதனிடையே மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் படப்பிடிப்பில் கொஞ்ச நாள் தோன்றாமல் இருந்தவரும் ஜீவாவாக நடிப்பவருமான வெங்கட்டும், கதிராக நடிக்கும் குமரனும் இணைந்துள்ளனர். இதுபற்றி குறிப்பிட்ட ஜீவா, 52 நாட்களுக்கு பிறகு மீண்டும் ஜீவாவாக என கூறி சில படப்பிடிப்பு படங்களை பகிர்ந்துள்ளார்.

VIDEO: பாலகிருஷ்ணா ஸ்டைலில் "DON'T TROUBLE" பஞ்ச் டயலாக்கை பேசி அசத்தும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Pandian Stores Sujitha imitates Balakrishna punch dialogue video

People looking for online information on Pandian stores, Sujitha, Trending, VijayTelevision will find this news story useful.