புது வீடு கட்டி பால் காய்ச்சிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை சுஜிதா.. வைரல் போட்டோஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று  ஒளிபரப்பாகும் சீரியல்  பாண்டியன் ஸ்டோர்ஸ்.

Advertising
>
Advertising

Also Read | அஜித் நடிக்கும் 'AK62'.. அப்டேட் எப்போ வரும்?.. LYCA தரப்பில் இருந்து வந்த அப்டேட்!  

சகோதரர்கள் சிலருக்கு இடையே நடைபெறும் பாச பின்னணியை வைத்து தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் இயங்கி வருகிறது. ஒவ்வொரு எபிசோடுகளும் விறுவிறுப்பாக கடந்து வருவதால் இந்த தொடரின் பார்வையாளர்கள் பலரும் மிக ஆவலுடனும் இதனை கண்டுகளித்து வருகின்றனர்.

இந்த சீரியலில் பிரபல அண்ணி கேரக்டரில், அதாவது தனம் கேரக்டரில் நடித்து வருபவர் சுஜிதா. நடிகை சுஜிதா, குழந்தையாக இருந்தே திரைப்படங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர். பின்னர் சிறுமியாகவும், இளம் பெண்ணாகவும் பல படங்களில் நடித்துள்ளார். தேவர் மகன், வாலி, தியா, ஆயிரத்தில் ஒருவன், ரோஜா, இருவர் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தனமாக பிரபலமான இவருக்கு ரசிகர்கள் ஏராளம். தெலுங்கு மொழியிலும் சில சீரியல்களில் சுஜிதா நடித்துள்ளார். டப்பிங் கலைஞராக மாஸ்டர் படத்தின் மலையாள பதிப்பில் மாளவிகா மோகனனுகக்கு குரல் கொடுத்ததும் சுஜிதா தான்.

இந்நிலையில் நடிகை சுஜிதா தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புது வீட்டில் குடியேறிய கிரகப் பிரவேச புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். கணவர் தனுஷ், மகன் தன்விந்தனுடன் புது வீட்டில் நடந்த பூஜைகளில் கலந்து கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Also Read | விஜய் நடிக்கும் 'லியோ'.. சம்பவம் இருக்கு.. தனது டீமுடன் லோகேஷ்!  வைரல் போட்டோ

புது வீடு கட்டி பால் காய்ச்சிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை சுஜிதா.. வைரல் போட்டோஸ் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Pandian Stores Sujitha house warming ceremony photos

People looking for online information on Pandian stores, Sujitha, Sujitha house warming ceremony will find this news story useful.