PANDIAN STORES : விலகிய சாய் காயத்ரி.. மீனா வீட்டு திருமணத்தில் ஐஸ்வர்யாவாக மீண்டும் வந்த VJ தீபிகா.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிக முக்கியமான தொடர்களில் ஒன்றாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் இருந்து வருகிறது.  பாண்டியன் மளிகை ஸ்டோர்ஸ் வைத்திருந்து பின்னர் முன்னேறும் சகோதரர்கள் மற்றும் அவர்களது மனைவிமார்கள் கொண்ட கூட்டு குடும்பத்தின் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட இந்த தொடரை மக்களும் ஆவலுடன் கண்டுகளித்து வருகின்றனர்.

Pandian Stores Sai Gayathri replaced by VJ Deepika
Advertising
>
Advertising

கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் ஒளிபரப்பாகும் சூழ்நிலையில், விரைவில் 1150 எபிசோடுகளையும் அடைய உள்ளது.

Pandian Stores Sai Gayathri replaced by VJ Deepika

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் அவ்வப்போது ஏராளமான நடிகர், நடிகைகளும் மாறி வருகிறார்கள். முல்லை கதாபாத்திரத்தில் இதுவரை மூன்று நடிகைகள் மாறிவிட்ட சூழலில், கண்ணனின் மனைவியாக வரும் ஐஸ்வர்யா ரோலிலும் சிலர் மாறி கொண்ட படி இருக்கின்றனர். அப்படி இருக்கையில் தற்போது ஐஸ்வர்யாவாக நடித்து வரும் நடிகை சாய் காயத்ரி பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரிலிருந்து விலகி உள்ளதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

ஆம், கடைசி சகோதரராக வரும் கண்ணனின் மனைவியாக நடிகை சாய் காயத்ரி, ஐஸ்வர்யா என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வந்த சூழலில் தற்போது அவர் இதிலிருந்து விலகி உள்ளது ரசிகர்கள் மத்தியில் சற்று பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை சாய் காயத்ரி பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இதுவரை தனது கதாபாத்திரத்திற்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துள்ள சாய் காயத்ரி, தன்னுடைய முடிவுக்கு மதிப்பும், சம்மதமும் தெரிவித்த விஜய் டெலிவிஷனுக்கும் நன்றியை தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இனிமேல் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என்பது குறித்து சில தகவலும் வெளியாகி உள்ளது. அதன்படி இதற்கு முன்பு ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வந்த விஜே தீபிகா மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடிக்கத் தொடங்கியுள்ளார். மீனாவின் சகோதரி திருமணத்துக்காக ஜீவாவும் மீனாவும் விசேஷம் நடக்கும் மீனாவின் வீட்டுக்கு முன்னதாக போய்விட, பின்னாலேயே அங்கு சீர்வரிசைகளுடன் செல்லும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் விஜே தீபிகா ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் தோன்றுகிறார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Pandian Stores Sai Gayathri replaced by VJ Deepika

People looking for online information on Pandian stores, Sai Gayathri, VJ Deepika will find this news story useful.