"அழக பாத்து நின்னுட்டானோ?.. நைட்டில அண்ணி எப்படி?”.. கொழுந்தனிடம் பல்பு வாங்கிய மீனா!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Vijay Television: விஜய் டிவியில் மிகப் பிரபலமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

Advertising
>
Advertising

Panidan Stores: இதில் அண்ணன் தம்பிகள் 4 பேரும் மிகவும் ஒற்றுமையாக ஒரே வீட்டில் தத்தம் மனைவியுடன் கூட்டு குடும்பமாக வசித்து வருகின்றனர். ஒரு கட்டத்தில் கடைசி தம்பியான கண்ணன் காதலித்து வந்தது வீட்டுக்கு தெரியாமல் இருந்தது. பின்னர் அவர் தன் காதலி ஐஸ்வர்யாவை திருமணம் செய்ததால் கண்ணனையும் அவரது மனைவி ஐஸ்வர்யாவையும் வீட்டுக்குள் அனுமதிக்காமல் அவர்களின் மீது கடுமையான கோபத்தில் வீட்டில் உள்ள அனைவரும் இருந்தனர்.

குடும்பத்தில் இணைந்த கண்ணன் - ஐஸ்வர்யா

இதனையடுத்து கண்ணனும் அவரது மனைவி ஐஸ்வர்யாவும் தனியாக ஒரு வீட்டில் மிகுந்த கஷ்டங்களோடு வசித்து வந்தனர். பின்னர் முதல் அண்ணனான மூர்த்தியின் மனைவி தனம், “நான் கண்ணனையும் அவனது மனைவி ஐஸ்வர்யாவையும் நம் வீட்டிற்கே அழைத்து வரப் போகிறேன்!” என சொல்லி தடாலடியாக கிளம்பிச் சென்று அவர்கள் இருவரையும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் வீட்டுக்கு அழைத்து வந்து விட்டார்.

ஐஸ்வர்யாவுக்கு பாராட்டு

அதன்பின்னர் ஐஸ்வர்யா, வீட்டில் உள்ள வேலைகளையெல்லாம் அக்கறையோடும் பொறுப்போடும் செய்து வந்தார். இதனைக் கண்டு தனமும் முல்லையும் ஐஸ்வர்யாவை பாராட்டி பேசினர். ஐஸ்வர்யாவை பாராட்டுவது மீனாவுக்கு பொறாமையை ஏற்படுத்தும் விதமாக இருந்தது. ஆனால் அண்மைக் காலமாக மீனாவுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் சின்ன சின்ன வாக்குவாதங்கள் ஏற்பட்டன.

 

போட்டியாளரின் திடீர் முடிவு! பேசியே மனசை மாத்திட்டாரா அமீர்.. 'தலைவன்' நிரூப்பின் Strategy-ஆ?

 

மீனா - ஐஸ்வர்யா மோதல்

பின்னர் ஒருநாள் மீனா தன் குழந்தைக்கு மொட்டை அடித்து காது குத்துவதற்காக தனக்கும் வீட்டில் உள்ள தனம், முல்லை மற்றும் ஐஸ்வர்யா மூவருக்கும் புடவை எடுத்து வந்தார். அப்போது ஐஸ்வர்யா மீனாவுக்கு எடுத்த புடவை தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும் அதை தனக்கு தந்து விடுமாறும் கிண்டலாக பேசி கேட்டார்.
அதை சீரியஸாக எடுத்துக்கொண்ட மீனாவோ, ‘அதெல்லாம் தரமுடியாது.. இது எனக்காக நான் எடுத்துக்கிட்டது!’என மிகவும் கண்டிப்பாக பேசினார். ஐஸ்வர்யாவும் மீண்டும் பலமுறை கெஞ்சிக் கேட்டுப் பார்த்தார். ஆனால் மீனா தரவே முடியாது என கறாராக சொல்லி விட்டு சென்று விட்டார்.

நைட்டியில் மீனா

இதனிடையே ஐஸ்வர்யா வீட்டில் இருக்கும்போது நைட்டி அணிவதை பார்த்த மீனா, ‘அவள் மட்டும் போடுகிறாளே? நாமும் போட்டால் என்ன?’ என்று தன் அம்மாவிடம் கூறி நைட்டி வாங்கித்தரச் சொன்னார். மீனா கேட்டபடியே அவரது அம்மாவும் நைட்டி வாங்கிக் கொடுத்துள்ளார். இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள ப்ரோமோவில் மீனா நைட்டி போட்டுக் கொண்டு நிற்பதை கண்ணன் கலாய்த்துள்ளார்.

அண்ணி அழக பாத்து பேசாம நின்னுட்டானோ?

அதில் கண்ணன், நைட்டியுடன் நிற்கும் தன் அண்ணி மீனாவை, மேலும் கீழுமாக பார்த்தபடி, ஒன்றும் பேசாமல் நின்று கொண்டிருந்தான். அப்போது மீனா, ‘என்ன கண்ணன்.. நம்மள பார்த்துட்டு ஒன்றும் பேசாமல் நிக்குறான்.. ஒருவேளை நம்ம அழகப்பாத்து வாயடைச்சு போய் நின்னுக்கிட்டு இருக்கானோ?’ என மனதில் நினைத்துக்கொண்டு,  ‘சரி கண்ணனிடமே கேட்டுடுவோம்!’ என முடிவெடுத்து, கண்ணனிடம், ‘என்ன கண்ணா? அப்படியே பாத்துக்கிட்டு இருக்குற? அன்னிக்கு நைட்டி அழகா இருக்கா?’ என கேட்கிறார்.

கண்ணன் அடித்த ட்விஸ்ட் - கடுப்பான மீனா

அதற்கு கண்ணனோ திடீரென வெடித்துச் சிரித்தபடி, ‘குட்டிசாத்தான் மாரி இருக்கு .. ஐய்யோ.. ஐய்யோ’ என கலாய்த்துவிடுகிறான். இதைக் கேட்ட மீனா கடுப்பாகிறார். ஏற்கனவே ஐஸ்வர்யாவின் மீது கோபமாக இருக்கும் மீனா, கண்ணனின் இந்த கலாய்ப்பால் இன்னும் கோபமாகியுள்ளார். இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் என்னென்ன களேபரம் நடக்கப் போகிறது என்பதை வரும் சீரியல் எபிசோடுகளில் பார்க்கலாம்.

என்னது? திரும்பவும் கண்ணம்மா கர்ப்பமா? பரபரப்பு திருப்பம்? வைரல் வீடியோ! Bharathi Kannamma

தொடர்புடைய இணைப்புகள்

Pandian Stores kannan stunned sister in law nighty viral comment

People looking for online information on Kannan, Meena, Panidan Stores, Vijay Television will find this news story useful.