மனைவி மீது கால் போட்டு தூங்கிய கொழுந்தன்.. உச்சு கொட்டிய அண்ணிகள்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் பங்கம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம், சொந்தமாக சூப்பர் மார்க்கெட் திறந்துவிட்டது.

Advertising
>
Advertising

ஒரே வீட்டில் அண்ணன் - தம்பி 4 பேரும் தத்தம் மனைவிமார்களுடன் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வரும் நிலையில் தான் தன் மனைவி ஐஸ்வர்யாவுடன் ஹாலுக்கு படுக்க வந்த கண்ணனிடம், எதற்காக ஹாலில் படுக்க வந்துவிட்டாய்? என தனம் கேட்க, அதற்கு கண்ணனோ, தங்களது ரூமில் ஃபேன் ஓடவில்லை என தெரிவித்தார்.

அதன் பிறகு காலையில் எழுந்த மூத்த அண்ணன் மூர்த்தி கண்ணன் ஐஸ்வர்யா மீது கால் போட்டு தூங்கிக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியும் அதிருப்தியும் ஆகி, தன் மனைவி தனத்திடம் கூற, தனமோ கூச்சத்தில் நெளியத் தொடங்கிவிட்டார். ஆனால் இப்போது கண்ணன் - ஐஸ்வர்யாவை யார் எழுப்புவது என இருவருக்குமே சங்கடம் உண்டாக இருவருமே தயங்கியபடி நின்றுவிட்டனர்.

அதற்குள் அங்கு வந்த மீனா, அதிர்ந்து போய் உருண்டை கண்ணை உருட்டி உருட்டி பார்த்ததுடன், கொழுந்தனை வறுத்தெடுத்தார். ஏற்கனவே தன்னை நைட்டியில் பார்த்தபோது பங்கமாக கலாய்த்த கண்ணன் மீது மீனாவுக்கு இன்னும் கோபம் வர, ஓடி சென்று தன் கணவன் ஜீவாவை அழைத்து வந்து அந்த அரிய காட்சியை பார் என காண்பித்தார். இதை பார்த்து ஜீவாவும் தெறித்து ஓட, அடுத்து வந்த முல்லையும் அதிர்ந்தார்.

ஒருவழியாய் முல்லையும் மீனாவும் மாற்றி மாற்றி, நடுஹாலில் படுத்திருந்த கண்ணன் - ஐஸ்வர்யாவை எழுப்ப முயல, அப்போது எழுந்த ஐஸ்வர்யா, “என்னங்க ரொம்ப சீக்கிரமே எழுப்பிட்ட்டீங்க.. இன்னும் விடியவே இல்ல, ரொம்ப பண்றீங்கங்க” என புலம்ப, அப்போது கண்ணன் காலை போட்டு தூங்குவதை மீனா, ஜாடை மாடையாக காட்ட, அதற்கும் ஐஸ் அசால்டாக, “இதுவா.. அவன் எப்பவும் அப்படிதான் தூங்குவான்” என சொல்லி எழுந்து சென்றுவிட, பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தால் பெரும் சங்கடமாக பார்க்கப்பட்ட, இவ்வளவு பெரிய விஷயம் டப்பென முடிவுக்கு வந்துவிட்டது.

தொடர்புடைய இணைப்புகள்

Pandian Stores Kannan embarrassing act viral 2022 march 16

People looking for online information on Pandian stores, Pandian Stores Kannan, Pandian stores serial, Pandian Stores Serial Episode, Vijay Tv Pandian Stores Serial will find this news story useful.