''சித்ரா கடைசியா பேசின விஷயங்கள்.. அந்த 1 மணி நேரம் முன்னாடி..'' - பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மறைந்த நடிகை சித்ரா குறித்து பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா பல்வேறு நினைவுகளை பகிர்ந்துள்ளார். 

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகை சித்ரா. இவர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த சம்பவம் அண்மையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தீவிர விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் நடிகை சித்ராவுடன் நடித்தவரான ஹேமா ராஜ்குமார் அவரை பற்றி பல்வேறு நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அப்போது அவர், ''சித்ரா மிகவும் தைரியசாலி, வெளியில் எதாவது பிரச்சனை ஏற்பட்டாலும்  தைரியமாக எதிர்த்து பேசுவாள். அவளின் தற்கொலையை எங்களால் ஜீரணிக்க முடியவில்லை. 

அவள் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு, நாங்கள் ஷோவில் இருந்த போது அவள் மகிழ்ச்சியாக பேசி கொண்டிருந்தாள். காஸ்ட்யூம்கள் குறித்தும் ஷோ குறித்தும் ஆவலோடு பேசினாள். ஆனால் அடுத்த 1 மணி நேரத்தில் அவள் தற்கொலை செய்து கொண்டாள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை'' என அவர் தெரிவித்தார். 

மேலும் சித்ராவுடனான தனது நினைவுகள் குறித்து பல்வேறு சம்பவங்களை அவர் பகிர்ந்து கொண்ட முழு வீடியோ தொகுப்பு இதோ.

 

''சித்ரா கடைசியா பேசின விஷயங்கள்.. அந்த 1 மணி நேரம் முன்னாடி..'' - பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா வீடியோ

தொடர்புடைய செய்திகள்

சித்ரா பற்றி ஹேமா நினைவுகள் | pandian stores hema opens on late actress chithra

People looking for online information on Chithra, Pandian Stores Hema will find this news story useful.