நடிகை சித்ராவின் கடைசி ஸ்டேஜ் -ஷோ.!! டிவி நட்சத்திரங்களுடன் மகிழ்ச்சி பொங்கும் முகத்துடன்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை சித்ராவின் கடைசி ஸ்டேஜ் ஷோவின் வீடியோ ரசிகர்களை கலங்க வைத்துள்ளது.

நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து நடிகையானவர் சித்ரா. பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை கதாபாத்திரம் மூலம் இவர் பிரபலமானார். மேலும் இவர் கால்ஸ் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

இவர் கடந்த 9-ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இவரின் திடீர் மரணம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் சித்ராவின் மரணம் தொடர்பாக தீவிர விசாரணையும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது சித்ராவின் கடைசி ஸ்டேஜ் ஷோ வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மா.க.பா, புகழ் என விஜய் டிவி நட்சத்திரங்களுடன் மகிழ்ச்சியாக அவர் ஆடி பாடி கொண்டாடும் இந்த நிகழ்ச்சியின் வீடியோவை பார்த்த ரசிகர்கள் Miss You Chithu என கண் கலங்க கமன்ட்ஸ் போட்டு வருகின்றனர்.

மறைந்த நடிகை சித்ரா பங்குபெற்ற கடைசி ஸ்டேஜ் ஷோவின் வீடியோ தொகுப்பு இதோ.

நடிகை சித்ராவின் கடைசி ஸ்டேஜ் -ஷோ.!! டிவி நட்சத்திரங்களுடன் மகிழ்ச்சி பொங்கும் முகத்துடன் வீடியோ

தொடர்புடைய செய்திகள்

சித்ராவின் கடைசி ஸ்டேஜ் ஷோ வீடியோ | pandian stores chithra's last stage performance video

People looking for online information on Chithra, Pandian Stores Chithra will find this news story useful.